Home
  Breathe Free
இது இருமலா அல்லது ஆஸ்துமாவா?
சிகிச்சைமுறை &
கட்டுப்பாடு
சந்தேகங்களும்,
தீர்வுகளும்
 
குழந்தைகளின் தூண்டல்கள் ஐயங்களும் தீர்வும் ஆஸ்துமா சிறார் கதைகள் சிறாருக்கான இன்ஹேலர்
 

குழந்தைகளிடையே காணப்படும் ஆஸ்துமா

Important Points to Remember

எவையெல்லாம் ஆஸ்துமாவின் காரணிகள்?

காரணிகள் என்பது உங்கள் குழந்தையின் ஆஸ்துமா அட்டாக்கைத் துவக்கும் அல்லது அதிகமாக்கும் பொருள்களாகும். காரணிகள் எங்கும் உள்ளன. உங்கள் வீடு, பள்ளி, விளையாட்டரங்கம் எல்லாமே காரணிகளைக் கொண்டிருக்கலாம்.

உங்கள் குழந்தைகளுக்கான காரணிகள் சில:
தூசும், புகையும்
செடிகளிலிருந்து வரும் பூக்களின் மகரந்தம்
பள்ளியில் உள்ள சுண்ணாம்புத் துகள்
காலநிலை மாற்றம்
சிரிப்பது, அழுவது போன்ற உணர்ச்சிகள்
விலங்கின் உரோமமும் பறவையின் சிறகுகளும்
உடலுழைப்பும், உடற்பயிற்சியும்

உங்கள் குழந்தைக்கு ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட காரணிகளோ இருக்கலாம். உங்கள் குழந்தையின் ஆஸ்துமாவிற்கு காரணி எதுவென்று தெரிந்தால் அவற்றைக் கட்டுப்படுத்த வழிவகுப்பது மிகவும் முக்கியம். உங்கள் வீட்டிலிருந்து காரணிகளை அகற்றுதல் அல்லது உங்கள் குழந்தைகளை வெளிப்புற காரணிகளிலிருந்து தள்ளிவைத்தல் உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக வைக்க உதவும். மேலும் குறைந்த ஆஸ்துமா தாக்கமே இருக்கும். உங்கள் குழந்தையின் ஆஸ்துமா தாக்கத்தை அறிய மருத்துவருடன் இணைந்து செயல்படவும்.

இது உங்கள் குழந்தையின் காரணியாக இருந்தால்
நீங்கள் இதைச் செய்யலாம்
 
ஷீட்கள், போர்வை, தலையணை, படுக்கை, மெத்தெனவுள்ள பொருட்கள், கார்பெட் மற்றும் பொதிக்கப்பட்ட பொம்மைகள் ஆகியவற்றில் தூசுகள் படிந்திருக்கும்.






 
வாரம் ஒருமுறை படுக்கும் துணிகளை வெந்நீரில் அலசவும்.
முழுவதும் உலர்த்தவும்.
தூசு படியாத தலையணை மற்றும் படுக்கை உறையைப் பயன்படுத்தவும்.
கார்பெட்டுகளைத் தவிர்க்கவும்.
கார்பெட் கண்டிப்பாகத் தேவையென்றால், ஒவ்வொரு வாரமும் அதைச் சுத்தப்படுத்தவும்.
குழந்தை வீட்டில் இல்லாதபோது தூசுகளைச் சுத்தப்படுத்தவும்.
அலசக்கூடிய பொதிக்கப்பட்ட பொம்மைகளை மட்டும் வாங்கவும்.
பொம்மைகளை வெந்நீரில் அலசவும்.
பொம்மையுடன் உங்கள் குழந்தை விளையாடும் முன் அவற்றை முழுதும் உலர்த்தவும்.

 
பூனைகள் மற்றும் நாய்கள் போன்ற வீட்டு விலங்குகள்.






 
செல்லப்பிராணிகளின் உரோமம் மற்றும் தூசைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு வாரமும் சுத்தம் செய்யவும்.
முடி மற்றும் இறகுள்ள செல்லப்பிராணிகளை தவிர்க்கவும். உங்கள் முக்கிய வசிப்பு மற்றும் உறங்கும் இடங்களிலிருந்து அவைகளைத் தள்ளிவைக்கவும்.
செல்லப்பிராணி கண்டிப்பாக வேண்டுமென்றால், மீன் வளர்க்கவும்.
 

 
உணவு





 
ஆஸ்துமா உள்ள பலர் உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்ற முடியாவிட்டாலும், சில குழந்தைகளுக்கு கொட்டைகள், முட்டைகள், பால், ஷெல் மீன், செயற்கை வண்ணம் ஆகியவற்றில் ஒவ்வாமை (Allergy) இருக்கும்...தயவுசெய்து உங்கள் குழந்தையின் காரணிகளைக் கண்காணித்து முடிந்தவரை அவற்றைத் தவிர்க்கவும். மேலும் மருத்துவரிடம் அறிவிக்கவும்.
 

 
உடற்பயிற்சி













 
ஆஸ்துமாவிற்கான சிறந்த உடற்பயிற்சிகள் யோகா, நீச்சல் மற்றும் ஸ்ப்ரின்டிங் போன்ற குறுகிய தூர ஓட்டங்கள் போன்றவை. உடற்பயிற்சியின் முன்பு ரிலீவர் (Reliever)/ரெஸ்க்யூயரைப் பயன்படுத்துவதால் ஆஸ்துமா உள்ள குழந்தைகளுக்கு நன்மை கிடைக்கும்.
உங்கள் குழந்தை எந்த விளையாட்டைத் தேர்ந்தெடுக்கும் முன்பும் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
அவசரத்தில் உங்கள் குழந்தையை அமைதியாக இருக்கும்படியும், ஆசிரியரிடம் உடனடியாகத் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தவும்.
எப்பொழுதும் உங்கள் குழந்தையின் ரிலீவர் (Reliever) மேலதிக பேக்கை அவன் கிட்டில் வைத்திருக்கவும், மேலும் அவசர வழிகாட்டல்களை உங்கள் எண்ணுடன் எழுதி பள்ளியில் கொடுக்கவும்.
 

 
கரப்பான்பூச்சி

 
கவுன்டர்கள், சின்க்ஸ், டேபிள்கள் மற்றும் தரையை சுத்தமாகவும், கிருமியற்றும் வைத்திருக்கவும்.
நீர்த்தொட்டியில் இரவுமுழுவதும் அசுத்த உணவை விட்டுவைக்காதீர்கள்.
உணவை காற்றுப்புகாத பெட்டியில் வைக்கவும்.
குப்பைத் தொட்டியை மூடிவைக்கவும்.
 

 
ஈரமான சமயலறை, குளியலறை மற்றும் அடித்தளத்தில் பூஞ்சை வளருதல்.





 
கடினமான இடத்தில் கரை அல்லது பூஞ்சைகளைக் கண்டால் நீர், சோப்பு ஆகியவற்றின் மூலம் சுத்தமாக்கவும். அந்த இடத்தை முழுவதும் உலர விடவும்.
வெளியேற்றும் காற்றாடியைப் பயன்படுத்தவும் அல்லது குளியலறை மற்றும் சமையலறையில் குளிக்கும்போதும், சமையல் செய்யும்போதும் அல்லது பாத்திரம் துலக்கும்போதும் ஜன்னலைத் திறந்து வைக்கவும்.
பாசானை வளரவிடாமல் செய்ய நீர் வழிவதை உடனடியாக சரிசெய்யவும்.
பாசான் வளராமல் இருக்க ஈரப்பதமான அல்லது நனைந்த பொருளை உலர்த்தி வைக்கவும்.
 

 
புகைப்பிடித்தல் மற்றும் வெளிப்புற காற்று மாசு




















 
உங்கள் குழந்தைக்கு அருகே அல்லது உங்கள் வீட்டில் யாரையும் புகைபிடிக்க விடாதீர்கள்.
வீட்டிலுள்ளவர்களை வெளியே சென்று புகைப்பிடிக்கச் சொல்லவும். இல்லையேல் கர்டைன்கள், சோஃபா மற்றும் கார்ப்பெட்டில் அதிக நேரம் புகை படியும்.
இது உங்கள் குழந்தைக்கு முக்கிய காரணியாக அமையலாம்.
காற்றோட்டம் நன்றாக இருக்கும் பொழுது உங்கள் குழந்தையை வெளியில் விளையாட விடவும்.
அதிக நேரம் ஓடும்படியான வெளிப்புற விளையாட்டைக் குறைக்கவும்.
உங்கள் குழந்தையின் ஆஸ்துமா எச்சரிக்கைக் குறிகளில் கவனம் செலுத்தவும். நீங்கள் அறிகுறி எதையும் பார்த்தால் வெளிப்புற செயலைக் குறைக்கவும். உங்கள் குழந்தையின் மருத்துவரிடம் இதைப் பற்றி பேச மறக்கவேண்டாம்.
சில தயாரிப்புகளைப் பயன்படுத்தும்போது உங்கள் குழந்தையின் ஆஸ்துமா அதிகமானால் வேறு தயாரிப்பைப் பயன்படுத்தத் தொடங்கவும். தயாரிப்புகளில் உள்ள கெமிக்கல் பொருள்கள் உங்கள் குழந்தைக்கு சேராமல் இருக்கலாம். ஒரு கொசுவர்த்தியானாது காற்றில் கலந்து உங்கள் குழந்தையை அடைவது 75 – 137 சிகரெட் புகைகளுக்கு சமம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
 

 
க்ளீனர்கள், பெயின்ட்கள், பசைகள், பூச்சிமருந்துகள், அலங்காரப் பொருட்கள், கொசுவர்த்திகள் அல்லது ஏர் ஃப்ரெஷ்னர்கள் போன்ற எரிச்சலூட்டும் வேதிப்பொருட்கள்.


 
நீங்கள் அந்தத் தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும் என்றால் உங்கள் குழந்தை அருகே இல்லை என்பதை உறுதிசெய்யவும்.
ஜன்னல் அல்லது கதவுகளைத் திறக்கவும் அல்லது காற்றை வெளித்தள்ளும் காற்றாடியைப் போடவும்.
லேபிளில் உள்ள வழிகாட்டல்களை நினைவில் கொள்ளவும்.
 


தயவுசெய்து நினைவில் கொள்ளவும்:இந்தப் பட்டியல் எல்லா காரணிகளையும் கொண்டிருக்கவில்லை. உங்கள் குழந்தைக்கு ஆஸ்துமா இருந்தால், நீங்கள்
உங்கள் குழந்தையின் காரணிகளைக் கவனித்து உங்கள் குழந்தை அதனுடன் தொடர்புகொள்வதைத் தவிர்க்கவும். உங்கள் காரணிகள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை ஆகியவற்றை எப்பொழுதும் மருத்துவரை அணுகிப் பேசவும்.



  ©2010 ப்ரீத் ஃப்ரீ(Breathe Free), அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.