Home
  Breathe Free
இது இருமலா அல்லது ஆஸ்துமாவா?
சிகிச்சைமுறை &
கட்டுப்பாடு
சந்தேகங்களும்,
தீர்வுகளும்

உங்கள் ஆஸ்துமாவின் அளவைக் கணக்கிடவும்

ஆஸ்துமா எவ்வாறு கண்டறியப்படுகிறது?  

உங்களுக்கோ, உங்களுக்கு விருப்பமானவர்களுக்கோ ஆஸ்துமா இருப்பது தெரியவந்தால், கண்டிப்பாக கவலைப்படத் தேவையில்லை. பயப்படவோ அல்லது உங்கள் வேலை அல்லது இடத்தை மாற்றவோ தேவையில்லை. ஒலிம்பிக் வீரர்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கும் ஆஸ்துமா உள்ளது. அதேசமயத்தில் அதனால் அவர்களுக்கு தங்களின் வெற்றிகரமான வாழ்வை அனுபவிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைப்பதில் உங்கள் காரணிகளைப் புரிந்துகொள்வதானது முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்கள் நோய் அறிகுறிகளை கவனித்துவரவும். மேலும் உங்கள் மருந்தை ஒழுங்காக எடுக்கவும். ஆனால், முதலில் சரியாக நோயை டயக்னோஸ் செய்ய வேண்டும்.

இந்தியாவில், பல பெற்றோர்கள் அவர்களின் குழந்தைக்கு ஆஸ்துமா இருப்பதை ஏற்றுக்கொள்வதில்லை. ‘ஆஸ்துமா’ என்ற வார்த்தையைத் தவிர்த்து ‘வீசிங் மூச்சுப்பிரச்சனை’ அல்லது ‘அலர்ஜி சுவாசப்பிரச்சனை’ என்பதாகவே ஒப்புக்கொள்கிறார்கள். குழந்தைகளையும் கஷ்டப்படுத்தி, அவர்களுக்கு அவர்களே மனஅழுத்தத்தை உருவாக்கி ஒவ்வொரு மருத்துவராக அலைவார்கள். முதலிலேயே ஆஸ்துமா இருப்பது கண்டறியப்பட்டு சரியான நேரத்தில் சிகிச்சையளித்தால் அவர்களின் குழந்தை நார்மலான வாழ்வை விரைவிலேயே வாழத்தொடங்கலாம். குழந்தைகள் முதலில் குழந்தைகளாக இருக்கவேண்டும். ஆஸ்துமா உள்ள குழந்தைகள் சாதாரண குழந்தைகளைப் போலவே அனைத்தையும் செய்ய இயலும் - பள்ளிக்குச் செல்வது, விளையாடுவது மற்றும் ஐஸ் க்ரீம் சாப்பிடுவது உட்பட!

ஆஸ்துமாவை சுலபமாக கண்டறியலாம். ஆனால் சிலசமயம் தங்களுக்கு வரும் தொடர் இருமலை முக்கியமாக கருதாமல், சரியான நேரத்தில் சிகிச்சையளிக்காமல் இருமல் மருந்தை எடுக்கின்றனர். அடிக்கடி ஆஸ்துமா சில குடும்பங்களில் வரும். உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைக்குள்ள ஆஸ்துமாவைக் கண்டறிவதில் மருத்துவருக்கு உதவ, மருத்துவர் கேட்கும் எல்லா கேள்விக்கும் சரியான பதிலளிக்கவும். கேள்விகள் உங்களின் நோய் அறிகுறிகள், குடும்ப வரலாறு, நீங்கள் எடுக்கும் மருந்து, உங்களுக்கு இருக்கும் அலர்ஜி ஆகியவைப் பற்றியதாக இருக்கும். இதையே சிகிச்சை வரலாறு என்கிறோம். சிகிச்சை வரலாற்றை வைத்தே பெரும்பாலான நோய் அறிகுறிகள் இருக்கும். மருத்துவர் சில உடற்சோதனைகள் செய்வார் மற்றும் பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) மற்றும் ஸ்பைரோமெட்ரி சோதனை எடுப்பது அவசியம்.

ஆஸ்துமா இருப்பது தெரியவந்தால் அதனைக் கன்ட்ரோலில் வைக்க நீங்கள் சரியான அதனை தொடர்ந்து கவனித்துவருதலாகும், அப்படியென்றால் நீங்கள் உங்கள் ஆஸ்துமா குறைந்துவருகிறதா இல்லை அதிகமாகிறதா என்பதை சோதனை செய்யவேண்டும். இது, மருந்தின் வீரியத்தை மாற்ற மருத்துவருக்கு உதவும். மேலும் அறிய, படிக்கவும்









பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer)  

பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) என்பது எளிய, கட்டுபடியாகக்கூடிய, கையடக்கமான சாதனம். இது சுவாசப் பிரச்சனை மற்றும் ஆஸ்துமாவைக் கண்டறிய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் உதவுகிறது. ஆஸ்துமா சிகிச்சையில் இருக்கும்பொழுது உங்கள் நிலையைக் கண்காணிக்கவும் இந்தக் கருவி உதவுகிறது.

இரத்தக் கொதிப்பைக் கண்டறிய பீபி கருவி, சர்க்கரைக்கு குளுக்கோமீட்டர் போல ஆஸ்துமாவைக் கண்டறிய தெர்மாமீட்டர் போல பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) பயன்படுகிறது. நோயாளி, சாதனத்தின் வாய்ப்பகுதியில் ஊதவேண்டும். உங்கள் நுரையீரலின் சக்தியைப் பார்க்க இது அளவு எடுக்கும். Image: Patient blowing into Peak Flow Master பெரும்பாலான மருத்துவர்கள் இந்த சாதனத்தை அவர்களின் கிளினிக்கில் வைத்திருப்பர், நீங்கள் ஆஸ்துமாவைக் கணக்கிட உதவும் வகையில் இது பெரிய மெடிக்கல் ஷாப்களிலும் கிடைக்கும்.


உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால் அது குறைந்துள்ளதா அல்லது எந்த மாறுபாடும் இல்லாமல் இருக்கிறதா என நீங்கள் பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) கொண்டு பார்க்கலாம். உங்கள் வயது மற்றும் உயரத்தைப் பொறுத்து உங்களுக்கு பீக் ஃப்ளோ மீட்டரில் (சுவாச மீட்டர்) எந்த அளவு சாதாரணமானது அல்லது நல்லது என்பதை மருத்துவர் காட்டுவார். அளவு குறைந்தால் ஆஸ்துமா குறையவில்லை என்று அர்த்தம், மேலும் இது உங்களுக்கு கூடிய விரைவில் அல்லது சில நாட்களில் அட்டாக் வரலாம் என்பதை தெரிவிக்கிறது. உங்கள் மருந்தின் வீரியம் அல்லது உங்கள் மருந்தின் நேரத்தை அதிகரிப்பதற்கான முன்னெச்சரிக்கை இது. உங்களின் முந்தைய அளவை விட இந்த எண் அதிகமாக இருந்தால் உங்கள் ஆஸ்துமா கன்ட்ரோலில் உள்ளது மற்றும் நீங்கள் தேறி வருகிறீர்கள் என்பதைத் தெரிவிக்கிறது. பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) அளவு சாதாரணமாக இருந்தால் (ரேட்டிங்கை மருத்துவர் உங்களுக்கு அறிவிப்பார்), உங்கள் ஆஸ்துமா கன்ட்ரோலில் உள்ளதாக அர்த்தம்.









ஸ்பைரோமெட்ரி சோதனை  

ஸ்பைரோமெட்ரி சோதனை என்பது அதிக உணர்திறனுடைய மற்றும் அதிநவீனமான சோதனை. இது ஆஸ்துமாவின் அறிகுறியை முன்கூட்டியே கண்டறியும். ஸ்பைரோமெட்ரி எவ்வளவு காற்றை உங்கள் நுரையீரல் தாங்கும் மற்றும் எவ்வளவு காற்றை உள்ளிழுத்து வெளித்தள்ளும் எனக் கண்டறிய உதவுகிறது. வேறுமாதிரி சொன்னால், இது உங்கள் நுரையீரலின் சக்தி மற்றும் சுவாசத்தின் கொள்ளவு போன்ற விவரங்களைத் துல்லியமாகத் தருகின்றது. லேப் அல்லது மருத்துவர் பார்க்கும் சோதனையில் ஈசிஜி சோதனையைப் போல உங்கள் அளவிற்கான வரைபடம் அச்சிடப்பட்டு வரும்.

பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer), ஸ்பைரோமெட்ரி இரண்டுமே உங்கள் ஆஸ்துமாவைக் கணக்கிட பயன்படுகிறது. மேலும் உங்கள் ஆஸ்துமா கன்ட்ரோலில் உள்ளதா எனப் பார்க்க உதவுகிறது.

இருப்பினும் இந்த சோதனை ஆறு வயதிற்கும் சிறிய குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. நீங்களும் உங்கள் மருத்துவரும் சேர்ந்து இதனைக் கண்டறிய பாடுபட வேண்டும். உங்கள் குடும்ப வரலாறு மற்றும் காரணிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் குழந்தையின் ஆஸ்துமா முதலிலேயே சரியாக கண்டறியப்படுமாறு பார்த்துக்கொள்ளவும். நீங்கள் உங்கள் மருத்துவரிடம் அடிக்கடி செல்வதன் மூலம், இருவரும் உங்கள் குழந்தையின் அறிக்கையை கண்காணித்து வரலாம்.




 
பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer)
பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) என்பது எளிய, கட்டுபடியாகக்கூடிய, கையடக்கமான சாதனம்.
ஸ்பைரோமெட்ரி சோதனை  
ஸ்பைரோமெட்ரி சோதனை என்பது அதிக உணர்திறனுடைய மற்றும் அதிநவீனமான சோதனை