எங்களை பற்றி

ப்ரீத்ஃப்ரீ குறித்து

நாள்பட்ட காற்றுப்பாதை நோய்களை கொண்டுள்ள நோயாளிகளுக்காக சிப்லா கொண்டு வந்த ஒரு பொது சேவை முனைப்பு தான் ப்ரீத்ஃப்ரீ. இது சிப்லா நிறுவனத்தின்
75 ஆண்டுகளை முன்னிட்டு தொடங்கப்பட்டது. இன்றைக்கு, சுவாசப் பராமரிப்புக்காக ஒரு விரிவான நோயாளி ஆதரவு திட்டமாக ப்ரீத்ஃப்ரீ விளங்கி வருகிறது.

ஆஸ்த்மா, சிஓபிடி மற்றும் ஒவ்வாமையால் வரும் ரினிடிஸ் போன்ற காற்றுப்பாதை நோய்களால் அவதிப்பட்டு வரும் நோயாளிகளுக்கு உதவ ப்ரீத்ஃப்ரீ உறுதிபூண்டுள்ளது. இது நோயை கண்டறிதல், ஆலோசனை வழங்குதல் மற்றும் சிகிச்சை இணக்கம் ஆகிய பகுதிகளில் நோயாளியின் முழுமையான பயணத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது. சுவாசப் பிரச்சனை உள்ள ஒவ்வொருவரும் எப்படி ஒரு இயல்பான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்பது குறித்த விழிப்புணர்வை கொண்டு வர பல ஆண்டுகளாகவே ப்ரீத்ஃப்ரீ பல்வேறு திட்டங்கள் மற்றும் முகாம்களை ஒருங்கிணைத்து நடத்தி வந்துள்ளது.

ப்ரீத்ஃப்ரீ க்ளினிக்குகள், மருந்தகங்கள் மற்றும் ஆலோசனை மையங்கள் என்ற தனது பரந்த நெட்வொர்க் உதவியுடன், தங்களது சுவாசப் பிரச்சனைகளை வெற்றிகரமாக எதிர்கொண்ட மனிதர்கள் அடங்கிய ஒரு சமூகத்தையும் மற்றும் ஒரு முழுமையான ஆரோக்கிய வாழ்க்கையை வாழ வழி தேடுபவர்களுக்கு ஒரு ஆதரவு அமைப்பையும் ப்ரீத்ஃப்ரி உருவாக்கியுள்ளது.

www.breathefree.com என்பது நாள்பட்ட காற்றுப்பாதை நோய்கள் தொடர்பான அனைத்து தகவலையும் ஒருங்கே கொண்டுள்ள ஒன்றாக விளங்குகிறது. இந்த இணையதளம் ஆஸ்த்மா, சிஓபிடி மற்றும் ஒவ்வாமையால் வரும் ரினிடிஸ் போன்ற பிரச்சனைகள் பற்றிய தகவல், தீர்வுகள் மற்றும் தேவைப்படும் உதவியை வழங்குகிறது. மேலும், ஆலோசனை கூறுபவர்களை சென்றடையவும் இந்த இணையதளம் உதவுகிறது, அவர்கள் நோய்கண்டறிதலில் உதவுவது மட்டுமல்லாது ஆலோசனை மூலமாக சரியான சிகிச்சைக்கும் ஆதரவளிப்பார்கள்.