அலர்ஜி ரினிடிஸ்

ஒவ்வாமை பற்றியது

உங்களை சுற்றி தூசு அல்லது புகை இருக்கும் போது அடிக்கடி தும்மல் வருகிறதா? ஆம் எனில், நீங்கள் அவற்றுக்கு ஒவ்வாமை கொண்டிருக்கும் சாத்தியம் அதிகமுள்ளது.

உங்கள் உடலின் பாதுகாப்பு அமைப்பு (நோயெதிர்ப்பு அமைப்பு என்றும் அறியப்படுவது), கிருமிகள் (வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள்) போன்ற தீங்கான விஷயங்களை எதிர்த்து போராட உதவுகிறது மற்றும் உங்களையும் பாதுகாக்கிறது. உங்களுக்கு எவற்றினாலாவது ஒவ்வாமை ஏற்படுகிறது என்றால், தீங்கில் இருந்து - அதாவது தூசு அல்லது செடிகள் மற்றும் மரங்களில் இருந்து வரும் மகரந்தம் மற்றும் சில நேரங்களில் குறிப்பிட்ட சில உணவு வகைகளில் இருந்து உங்களை முழுமையாக பாதுகாக்க உங்களின் நோயெதிர்ப்பு அமைப்பு முயற்சிக்கிறது என்று அர்த்தமாகும். ஒரு ஒவ்வாமையானது சருமம், கண்கள் மற்றும் மூக்கு போன்ற உடலில் எந்தவொரு பகுதியையும் பாதிக்கும்.

''உங்களுக்கு எவற்றினாலாவது ஒவ்வாமை ஏற்படுகிறது என்றால், தீங்கு ஏற்படுத்துபவைகளில் இருந்து உங்களை முழுமையாக பாதுகாக்க உங்களின் நோயெதிர்ப்பு அமைப்பு முயற்சிக்கிறது என்று அர்த்தமாகும்''

ஒவ்வாமைகள் மிக பொதுவானது மற்றும் யாரையும் பாதிக்கும். எனினும், உங்கள் குடும்ப உறுப்பினர்களில் யாருக்கேனும் ஒவ்வாமைகள் வரலாறு இருந்தால், உங்களுக்கும் ஒரு ஒவ்வாமை மிக அனேகமாக ஏற்படலாம்.

ஒவ்வாமை நாசியழற்சி என்பது, குறிப்பாக மூக்கை பாதிக்கும் ஒரு ஒவ்வாமையை குறிக்கிறது. உங்களுக்கு ஒவ்வாமை உள்ள எதையேனும் நீங்கள் சுவாசிக்கும் போது இதன் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்குகின்றன. இவை ஒவ்வாமையை தூண்டுபவைகள் என அழைக்கப்படுகின்றன. மிகவும் பொதுவான ஒவ்வாமை தூண்டல்கள் வருமாறு:

  • மகரந்தம் மற்றும் புகை போன்ற வெளிப்புற ஒவ்வாமை தூண்டுபவைகள்

  • தூசு பூச்சிகள், செல்லப்பிராணி ரோமம் அல்லது டேண்டர் மற்றும் மோல்ட் (பூஞ்சை) போன்ற உள்புற வ்வாமை தூண்டுபவைகள்

  • சிகரெட் புகை, வாசனை திரவியங்கள், ரசாயனங்கள் மற்றும் தூபங்கள் போன்ற இதர எரிச்சலூட்டுபவை

பரவலாக கூறுவதென்றால், இரண்டு வகையான ஒவ்வாமை நாசியழற்சி உள்ளன - பருவகாலத்தில் வருவது மற்றும் ஆண்டு முழுவதும் இருப்பது.

பருவகால ஒவ்வாமை நாசியழற்சி என்பது ஆண்டின் சில குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே உங்களின் அறிகுறிகள் வெளிப்படுவது அல்லது மோசமடைவதாகும். இது உங்களுக்கு ஒவ்வாமையை தூண்டுவது மகரந்தம் போன்ற ஏதாவது இருந்தால் மிகவும் சாதாரணமாக ஏற்படுகிறது, ஏனெனில் ஆண்டின் குறிப்பிட்ட சில காலங்களில் மட்டுமே மகரந்தம் ஏராளமாக காணப்படுகிறது.

ஆண்டு முழுவதும் இருக்கும் ஒவ்வாமை நாசியழற்சி என்பது, மற்றொரு புறத்தில் ஆண்டு முழுவதும் உங்களுக்கு அதன் அறிகுறிகள் இருக்கிறது என அர்த்தமாகும். இது ஆண்டு முழுவதும் இருக்கும் தூசு, புகை, தூசு பூச்சிகள் இத்யாதி போன்ற விஷயங்கள் உங்களுக்கு ஒவ்வாமையை தூண்டுகிற போது மிகவும் சாதாரணமாக ஏற்படுகிறது.

Please Select Your Preferred Language