ஆஸ்துமா

ஆஸ்த்மா பற்றி

ஆஸ்த்மா என்பது பயத்தையும், கவலையையும் ஏற்படுத்தும் ஒரு நிலையாகும், ஆனால் உண்மையில் அது பற்றி கவலைப்படுவதற்கு எதுவுமில்லை. எளிதாக கூறுவதென்றால், ஆஸ்த்மா என்பது நுரையீரல்களில் காற்றுப்பாதைகளை பாதிக்கும் ஒரு சுவாசப் பிரச்சனையாகும். என்ன நடக்கிறது என்றால், சில நேரங்களில் காற்றுப்பாதைகள் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு எதிர்வினை ஆற்றுவதால், அவற்றை சுற்றியுள்ள தசைகள் இறுகுகின்றன; இதன் காரணமாக காற்றுப்பாதை குறுகலாவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இது காற்றுப்பாதை உட்படையை சுற்றிலும் உபரியாக சளி சுரக்கவும் வழிவகுப்பது காற்றுப்பாதையை மேலும் சுருங்கச் செய்கிறது. இவை அனைத்துமே கேட்பதற்கு அச்சமூட்டுவதாக இருந்தாலும், அந்தளவுக்கு ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை.

''நீங்கள் இயல்பான, சுறுசுறுப்பான ஒரு வாழ்க்கையை வாழ்வதை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை"

ஆகவே, ஆஸ்த்மா தொடர்ந்து இருக்குமா அல்லது வந்து போவதாக இருக்குமா? இது பருவகால ஆஸ்த்மா என்றழைக்கப்படும் ஒரு நிலையாக உள்ளது, இதில் உங்களின் அறிகுறிகள் ஒரு பருவகாலத்தின் போது மோசமடையும், மற்றும் இன்னொன்றின் போது அறிகுறிகள் வெளிப்படாது. இது ஆஸ்த்மா தெளிவான காரணம் எதுவுமின்றி வெறுமனே வந்து போகும் ஒரு நிலை என்ற தவறான ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. எனினும், ஆஸ்த்மா உங்களுடன் நீண்ட காலத்துக்கு நீடித்து இருக்கும். ஆனால் ஆஸ்த்மா பற்றி நீங்கள் ஒரு தடவை அதிகம் தெரிந்து கொண்டதும், ஆஸ்த்மாவை சமாளிப்பது மற்றும் ஒரு ஆஸ்த்மா தாக்கு ஏற்படுவதை முன்கணித்து தடுப்பது அப்படி ஒன்றும் பெரிய கஷ்டமில்லை.

ஒவ்வொரு நபருக்கும் உள்ள ஆஸ்த்மா மற்றவர்களுக்கு இருப்பதில் இருந்து வேறுபட்டது. நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களை போல் பல மனிதர்கள் உள்ளனர், அவர்கள் ஆஸ்த்மாவை வெற்றிகரமாக சமாளித்து வருகின்றனர் என்பது தான். உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் மனிதரக்ளுக்கு ஆஸ்த்மா உள்ளதை உலக சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது, அவர்களில் 25 முதல் 30 மில்லியன் பேர் இந்தியாவில் இருக்கின்றனர். எனவே, அது ஒரு பொதுவான நிலையாகும், மற்றும் நிச்சயம் நீங்கள் மட்டும் தனியாக இல்லை.

வீடியோ: ஐஸ்க்ரீம் மற்றும் ஆஸ்த்மாவில் அதன் விளைவுகள் பற்றி டாக்டர் குமார் பேசுகிறார்

துரதிர்ஷ்டவசமாக ஆஸ்த்மாவை குணப்படுத்த முடியாது என்றாலும், அதன் அறிகுறிகளை முழுமையாக கட்டுப்படுத்துவதை நவீன மருந்துகள் சாத்தியமாக்கியுள்ளது, இதனால் உங்களுக்கு ஆஸ்த்மா இருப்பதையே நீங்கள் கிட்டத்தட்ட மறந்து விடலாம். எனவே, உங்களுக்கு ஆஸ்த்மா இருப்பதால் இயல்பான, சுறுசுறுப்பான ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. திரைப்பட துறை, தொழில் உலகம், ஏன் விளையாட்டு துறையில் கூட ஆஸ்த்மா நோய் உள்ளபல முக்கியமான ஆளுமைகள் இருக்கின்றனர், ஆனால் அவர்கள் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்வதை அந்நோய் தடுத்து நிறுத்தவில்லை.

வலது கை பக்க பேனர் 1- நேஹா எப்படி ஆஸ்த்மாவை வீழ்த்தி தனது முதல் 4 கி.மீ தூரத்தை ஓடினார் என்பதை வாசிக்கவும் (ஊக்கமூட்டும் கதைகள்)

வலது கை பக்க பேனர் 2- எனக்கு ஆஸ்த்மா இருந்தாலும் கூட நான் உடற்பயிற்சி செய்ய அல்லது விளையாட முடியுமா? (எஃப்ஏக்யூ)

வலது கை பக்க பேனர் 3- தங்களது சுவாசப் பிரச்சனைகளில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்த மனிதர்களுடன் இணைய கம்யூனிட்டியில் சேர்ந்திடுங்கள் (ப்ரீத்ஃப்ரீ கம்யூனிட்டி)

ஆஸ்த்மாவை தூண்டுபவைகள்

ஆஸ்த்மாவை தூண்டுபவை - தூசு பூச்சிகள் முதற்கொண்டு டியோடெரன்ட்கள் வரை - எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம், இது காற்றுப்பாதைகளை எரிச்சல்படுத்துவதால் ஆஸ்த்மா அறிகுறிகள் சட்டென உயர்ந்து ஆஸ்த்மா தாக்கு ஏற்பட வழிவகுக்கிறது. பரவலான நம்பிக்கைக்கு நேர்மாறாக, ஒரு குறிப்பாக தூண்டுபவைகளை உங்களால் அடையாளம் காண முடியும் என்றால், ஆஸ்த்மா அட்டாக் ஏற்படுவதை முன்கணிக்கும் சாத்தியம் உள்ளது. எனினும், ஒவ்வொருவரின் ஆஸ்த்மாவும் வித்தியாசமானது என்பதை நினைவில் கொள்வது முக்கியமாகும், மற்றும் அதே போல் அவர்களுக்கு தூண்டுபவைகளும் வித்தியாசமாக இருக்கலாம். உங்களுக்கு ஆஸ்த்மாவை தூண்டி விடுவதை தெரிந்து வைத்துக் கொள்வது உங்களுக்கு ஆஸ்த்மா தாக்குகள் ஏற்படுவதை முன்கணிக்கவும் மற்றும் தடுக்கவும் உதவும் மற்றும் ஆஸ்த்மாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

சில நேரங்களில் தூண்டுபவைகளை சுலபமாக அடையாளம் காணலாம், சில நேரங்களில் அவ்வாறு முடியாது. எனினும், உங்களுக்கு எது தூண்டி விடுகிறது என்பதை கண்டுபிடிக்க உங்கள் மருத்துவர் உதவார், மற்றும் அவைகளை தவிர்க்க உங்களால் இயன்றதை நீங்கள் செய்ய முடியும்.

ஆஸ்த்மாவை மிக பொதுவாக தூண்டும் சிலவை வருமாறு - (இது ஒரு விளக்கப்படப் பட்டியலாக இருக்கும்)

தூசு பூச்சிகள் - மெத்தைகள், திரைச்சீலைகள் மற்றும் மென் பொம்மைகளில் இருக்கும் பூச்சிகள்.

மகரந்தம் - தாவர பூக்கள் அடிக்கடி வெளியிடும் மகரந்தம் சில மனிதர்களுக்கு ஆஸ்த்மாவை தூண்டுபவையாக இருக்கும்

சிகரெட் புகை மற்றும் காற்று மாசுகள் - பட்டாசுகளில் வெளிவரும் புகை, வெளியேறும் தூபங்கள், மற்றும் சிகரெட் புகை ஆஸ்த்மா தாக்கை தூண்டுபவையாக இருக்கும்.

செல்லப்பிராணிகள் - செல்லப்பிராணி ரோமம், இறக்கைகள், எச்சில் மற்றும் மென்ரோமம் ஆஸ்த்மாவை தூண்டும்.

தொழில்முறை தூண்டல்கள் - அச்சகங்கள், பெயின்ட் தொழிற்சாலைகள், நகைத் தயாரிப்பு கூடங்கள், குவாரிகள் போன்றவற்றில் வேலை செய்வது உங்கள் ஆஸ்த்மாவுக்கான காரணமாக இருக்கும்.

ஜலதோஷம் மற்றும் வைரஸ்கள் - உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஆஸ்த்மா தாக்குகளை ஒதுக்கி வைக்க உதவும்.

மருந்தளிப்பு - சில மருந்தளிப்புகள் உங்கள் உடலுடன் மோசமாக எதிர்வினையாற்றலாம். எனவே உங்களின் அனைத்து மருந்துகள் பற்றி உங்கள் மருத்துவருக்கு தெரிவியுங்கள்.

உடற்பயிற்சி - உங்களை ஃபிட் ஆக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி ஒரு நல்ல வழியாகும். எனினும், சில மனிதர்களுக்கு உடற்பயிற்சியே ஒரு ஆஸ்த்மா தாக்கிற்கான காரணமாக கூட இருக்கும்.

உணவு - ஆஸ்த்மா உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கண்டிப்பான உணவுமுறை தேவையில்லை, ஆனால் சிலருக்கு பால், ஃபிஸ்ஸி பானங்கள் மற்றும் கொட்டைகள் போன்ற உணவு ஒவ்வாமையை உண்டாக்கலாம்.

பருவநிலை - வெப்பநிலை சட்டென மாறுவதும் ஆஸ்த்மாவை தூண்டலாம்

மோல்ட்ஸ் மற்றும் பூஞ்சை - ஈரமான சுவர்கள், அழுகும் இலைகள் மற்றும் பூஞ்சைகள் தாக்கம் ஆஸ்த்மாவை தூண்டுபவைகள் என அறியப்பட்டுள்ளது.

அபரிமிதமான உணர்ச்சிகள் - மன அழுத்தம் உங்கள் உடலை போராடும் நிலைக்கு தள்ளுகிறது, மற்றும் ஆகவே அது ஆஸ்த்மாவை தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

ஹார்மோன்கள் - பெண்களுக்கு ஹார்மோன்கள் ஆஸ்த்மாவை தூண்டலாம். சிலருக்கு பருவமடைவதற்கு சற்று முன்பு, அவர்களின் மாதவிலக்கு சுழற்சி மற்றும் கர்ப்பக் காலத்தின் போது ஆஸ்த்மா தாக்குகளை அனுபவிக்கலாம்.

கொசுவர்த்திச் சுருள்கள், ரூம் ஃப்ரெஷ்னர்கள் மற்றும் சுத்தப்படுத்தும் பொருட்கள் - இவைகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் உங்களின் காற்றுப்பாதைகளுக்கு எரிச்சலூட்டி ஒரு ஆஸ்த்மா தாக்கை தூண்டி விடலாம்.

For more information on the use of Inhalers, click here

To book an appointment with the nearest doctor, click here

Please Select Your Preferred Language