தொடர்ச்சியான இருமல்

இருமல் பற்றியது

நுரையீரல்கள் மற்றும் காற்றுப்பாதைகளில் உள்ள ஏதேனும் எரிச்சலூட்டுபவை மற்றும்/அல்லது சுரப்புகளை வெளியேற்ற உடல் முயற்சிப்பதால் இருமல் உண்டாகிறது. எப்போதாவது இருமல் வருவது புரிந்துக் கொள்ளக் கூடியது மற்றும் இயல்பானதே. எனினும், இருமல் நீடித்திருப்பது அல்லது நாள்பட்டு இருப்பது, வேறு ஏதோ பிரச்சனை இருப்பதை சுட்டிக்காட்டுபவையாக இருக்கலாம். ஆகவே, நீடித்திருக்கும் ஒரு இருமல் மற்றும் இயல்பான ஒன்றுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன?

நீடித்திருக்கும் ஒரு இருமல் என்பது, வயது வந்தவர்களுக்கு ஒரு சில வாரங்களுக்கும் அதிகமாக வழக்கமாக எட்டு வாரங்களாக இருப்பது மற்றும் குழந்தைகளுக்கு ஒரு மாதமாக அதாவது நான்கு வாரங்களாக நீடித்திருப்பது ஆகும். நீடித்திருக்கும் இருமலுக்கு புகைப்பிடித்தல், பிராங்கைட்டிஸ், ஆஸ்த்மா, சிஓபீடி மற்றும் சுவாசப்பாதையில் நோய்த்தொற்றுகள் போன்ற சில காரணங்களாக இருக்கின்றன. எனினும், இது பற்றி கவலைப்படுவதற்கு எதுவுமில்லை, ஏனென்றால் சரியாக நோயை கண்டறிதல் மற்றும் சிகிச்சை உடன் இதனை சுலபாக சமாளித்திட முடியும்.

Please Select Your Preferred Language