மூச்சுவிட

மூச்சுத்திணறல் என்றால் என்ன?

10 படிக்கட்டுகளில் ஏறிய பிறகோ அல்லது குறிப்பாக ஒரு கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகோ நாம் அனைவருமே சில சமயங்களில் மூச்சு விட சிரமப்படுவதை அனுபவித்திருப்போம். இது நீங்கள் சுவாசிக்க சிரமப்படும் போது உங்களுக்கு ஏற்படும் அசெளகரியமான உணர்வு ஆகும். நீங்கள் மிகவும் கடினமாக உழைத்திருந்தால் சுவாசிக்க சிரமப்படுவதை உணர்வது முற்றிலும் இயல்பானதே. இந்த நேரத்தின் போது, உங்கள் உடலுக்கு அதிக பிராணவாயுவை வழங்குவதற்காக நீங்கள் வேக வேகமாக மூச்சை உள்ளிழுத்து வெளி விடுகிறீர்கள். எனினும், முற்றிலும் இயல்பான செயல்பாடுகளை நீங்கள் மேற்கொள்ளும் போது மூச்சுவிட சிரமப்படுவதை நீங்கள் உணர்ந்தால், அது ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.

மூச்சுத்திணறல் என்பது ஒரு ஆழமான பிரச்சனையின் அறிகுறியாக, அதாவது ஆஸ்த்மா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (சிஓபீடி), ரத்தச்சோகை மற்றும் பதற்றம், இவைகளுடன் மற்றவையும் இருக்கலாம். எனினும், துல்லியமான ஒரு நோய் கண்டறிதல் மற்றும் முறையான சிகிச்சையுடன் இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் எளிதாக கட்டுப்படுத்தி மற்றும் சமாளிக்க முடியும்.

உங்களுக்கு திடீரெனமிகவும் மூச்சுத்திணறினால் என்ன செய்ய வேண்டும்

1) பயப்படாமல் இருக்க முயற்சியுங்கள், ஏனெனில் பயந்தால் மூச்சுத்திணறல் மேலும் மோசமாகும்.

2) மூச்சுத்திணறலுக்கு வெளிப்படையான காரணம் எதுவும் இல்லை என்றால் மருத்துவரை அழைக்கவும் அல்லது மருத்துவமனைக்கு செல்லவும்

3) நீங்கள் ஒரு ஆஸ்த்மா நோயாளியாக இருந்தால், உங்கள் மருத்துவர் விவரித்தபடி உங்களின் ரிலீவர் இன்ஹேலரை பயன்படுத்தவும்