அலர்ஜி ரினிடிஸ்

அறிகுறிகள்

ஒவ்வாமையால் வரும் ரினிடிஸ்–ன் அறிகுறிகள் வழக்கமாக ஒரு ஒவ்வாமை ஊக்கியால் உங்களுக்கு ஏற்படும் மற்றும் அதனை எளிதாக அடையாளம் காணலாம். ஆரம்ப அறிகுறிகள் சிலவற்றில் அடங்குபவை வருமாறு:

  • திரும்ப திரும்ப தும்முவது, குறிப்பாக அதிகாலை நேரத்தில்

  • மூக்கு ஒழுகுதல் மற்றும் நாசியில் இருந்து மெலிதாக நீர்வடிவது, இது தொண்டை கரகரப்பை உண்டாக்கும்

  • கண்களில் நீர் தளும்புவது மற்றும் உறுத்தல்

  • காதுகள், மூக்கு மற்றும் தொண்டையில் குறுகுறுப்பு

பின்னர் ஏற்படக்கூடிய அறிகுறிகளில் அடங்குபவை வருமாறு:

  • மூக்கடைப்பு

  • தலைவலி

  • சோர்வு மற்றும் எரிச்சல்தன்மை

  • காதுகள் அடைப்பு

  • நுகர்வு உணர்வு குறைதல்

காலப்போக்கில் ஒவ்வாமை ஊக்கிகள் உங்களை குறைவாக பாதிக்கலாம், மற்றும் உங்களின் அறிகுறிகள் முன்பு இருந்ததை விட கடுமையில் குறையலாம்.

 

ஒவ்வாமை ரினிடிஸ் எதிர் சாதாரண ஜலதோஷம்

ஒவ்வாமை ரினிடிஸ்–ன் அறிகுறிகள் ஒரு சாதாரண ஜலதோஷத்தின் அறிகுறிகளுடன் எளிதில் குழப்பத்தை உண்டாக்கும். எனினும், அவை இரண்டுக்கும் இடையே வித்தியாசப்படுத்த உங்களுக்கு உதவ அறிகுறிகளில் குறிப்பிட்ட சில வித்தியாசங்கள் உள்ளன.

ஒவ்வாமை ரினிடிஸ்

சாதாரண ஜலதோஷம்

ஒவ்வாமை ஊக்கிகளால் ஏற்படுவது

கிருமிகளால் ஏற்படுவது

உங்களுக்கு பொதுவாக காய்ச்சல் அல்லது உடல் வலி இருக்காது

உங்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலி இருக்கும்

உங்கள் நாசியில் உள்ள சளி தெளிவாகவும் தண்ணியாகவும் இருக்கும்

உங்கள் நாசியில் உள்ள சளி மஞ்சளாக அல்லது பச்சை மற்றும் அடர்த்தியாக இருக்கும்

தும்மல் தாக்கு நிற்கும் முன்பு நீங்கள் பல தடவை தும்முவீர்கள்

தும்மல்கள் அடிக்கடி இருக்காது, மற்றும் வழக்கமாக ஒரு நேரத்தில் ஒரு சிலதுடன் நின்று விடும்.

கண்களில் தண்ணீர் மிக அதிகமாக தளும்பும்

கண்களில் தண்ணீர் தழும்பாது

சில தினங்களுக்கு பிறகும் அறிகுறிகள் நீடிக்கும்

ஒரு சில தினங்களில் அறிகுறிகள் சரியாகிவிடும்

 

உங்களுக்கு ஒவ்வாமை ரினிடிஸ்–ன் அறிகுறிகளில் ஏதேனும்/அனைத்தும் இருப்பதாக நீங்கள் கண்டால், சரியான நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்காக உங்கள் மருத்துவருடன் நீங்கள் ஆலோசிப்பது முக்கியமானது. ஒவ்வாமை ரினிடிஸ்–க்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது முக்கியமானது, ஏனெனில் அது ஆஸ்த்மா, காது நோய்த்தொற்றுகள் மற்றும் சைனசிடிஸ் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

 

வலது கை பக்க பேனர்கள்

வலது கை பக்க பேனர் #1 - புஷ்பேந்திர சிங் தனக்குள்ள ஒவ்வாமை ரினிடிஸ்–ஐ முறியடித்து மற்றும் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். (ஊக்கப்படுத்தும் கதை)

வலது கை பக்க பேனர் #2 - ஒவ்வாமை உள்ள எல்லோருக்குமே ஒவ்வாமை ரினிடிஸ் இருக்குமா? (எஃப்ஏக்யூஎஸ்)

வலது கை பக்க பேனர் #3 - தங்களது சுவாசப் பிரச்சனைகளில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்த மனிதர்களுடன் இணைய கம்யூனிட்டியில் சேர்ந்திடுங்கள் (ப்ரீத்ஃப்ரீ கம்யூனிட்டி)

Please Select Your Preferred Language