உள்ளிழுக்கும்

இன்ஹேலர்களை வைத்து செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக் கூடாதவைகள்

ஆஸ்த்மா மற்றும் சிஓபீடி போன்ற உங்களின் சுவாசப் பிரச்சனைகளுக்கான சிகிச்சை என்று வரும் போது, இன்ஹேலர்களே உங்களின் சிறந்த தோழனாகும். உங்கள் இன்ஹேலரை செயல்திறனுடன் பயன்படுத்தி மற்றும் உங்களுக்குள்ள சுவாசப் பிரச்சனையை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க உதவும் சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் இன்ஹேலரை சரியான முறையில் பயன்படுத்தி வருகிறீர்கள் என்பதை உறுதி செய்ய நோயாளி தகவல் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றவும் (இன்ஹேலர்களை எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்)

செய்யக்கூடியவை -

 • குழப்பத்தை தவிர்க்க உங்களின் கன்ட்ரோலர் மற்றும் ரிலீவர் இன்ஹேலர்களை அடையாளப்படுத்தவும்

 • இன்ஹேலரின் மவுத்பீசை உங்கள் வாயால் மூடும் முன்பு மூச்சை முழுமையாக வெளியே விடவும்.

 • வாயில் இருந்து இன்ஹேலரை அகற்றிய பிறகு, உங்கள் மூச்சை சுமார் 10 விநாடிகளுக்கு, அல்லது செளகரியப்படும் நேரம் வரையில் இழுத்துப் பிடிக்கவும்.

 • இன்னொரு டோஸ் தேவைப்பட்டால், இரண்டாவது டோசை எடுப்பதற்கு முன்பு குறைந்தது 1 நிமிடம் காத்திருக்கவும்.

 • உங்கள் இன்ஹேலரில் மீதமுள்ள டோஸ்களின் எண்ணிக்கையை சரிபாருங்கள்.

 • டோஸ் கவுன்டர்களை பொறுத்த வரை, ஒரு சில டோஸ்களே மிஞ்சி இருப்பதை சுட்டிக்காட்டடோஸ் கவுன்டரின் நிறம் பச்சையில் இருந்து சிவப்புக்கு மாறும் போது ஒரு புதிய இன்ஹேலரை வாங்குவதை பரிசீலியுங்கள்.

 • நோயாளி தகவல் துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சுத்தப்படுத்தும் மற்றும் கழுவும் முறைகளை பின்பற்றவும்.

 • பிரயாணம் செய்யும் போது உங்கள் இன்ஹேலர் அதன் அசல் பாக்கேஜில் வைத்து மற்றும் உங்கள் மருத்துவரின் ப்ரிஸ்கிரிப்ஷனையும் எடுத்துச் செல்லுங்கள்

 • உங்கள் மருத்துவருடன் பேசி மற்றும் இன்ஹேலர்கள் குறித்து உங்களுக்கு இருக்கக் கூடிய ஏதேனும் சந்தேகங்களுக்கு தெளிவு பெறவும்.

செய்யக்கூடாதவை

 • உங்கள் இன்ஹேலர் உள்ளே சுவாசத்தை விடக் கூடாது.

 • டோஸ் கவுன்டர்களை பொறுத்த வரை, டோஸ் கவுன்டரில் உள்ள எண்களை திருத்திக்கொள்ள வேண்டாம்

 • காலாவதி தேதிக்கு பிறகு இன்ஹேலரை பயன்படுத்தக் கூடாது

 • பரிந்துரைக்கப்பட்ட டோசுக்கு அதிகமாக எடுக்கக் கூடாது.

Please Select Your Preferred Language