உள்ளிழுக்கும்

இன்ஹேலர்: தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள்

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் சுவாசப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க மிகவும் செயல்திறனுள்ள வழி இன்ஹேலர்கள் தான் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டாலும், அந்த சாதனங்களை பற்றி இன்னமும் பல தவறான நம்பிக்கைகள் சுற்றி வருகின்றன. இந்த தவறான நம்பிக்கைகள் காரணமாகவே, சில மனிதரக்ளிடம் இன்ஹேலேஷன் தெரபி தான் அவர்களுக்கு சிறந்தது என்று கூறினால் அவர்கள் அடிக்கடி சிறிதளவு கவலைப்படுகின்றனர். எனினும், இன்ஹேலர்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது மற்றும் செயல்திறனுள்ளது, ஆகவே நீங்கள் எந்த கவலையும் படாமல் அவைகளை பயன்படுத்தி வர முடியும்.

இன்ஹேலர்கள் என வரும் போது மனிதர்களிடத்தில் பொதுவாகஇருக்கும் சில தவறான நம்பிக்கைகள் வருமாறு:

தவறான நம்பிக்கை #1 - இன்ஹேலர்கள் அடிமைப்படுத்துகிறது.

பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இன்ஹேலர்களை தொடர்ந்து பயன்படுத்தினால் நீங்கள் அதற்கு அடிமையாகி விடுவீர்கள் என அர்த்தமல்ல. இன்ஹேலர்களில் பயன்படுத்தப்படும் மருந்து பழக்கத்தை உருவாக்குவது அல்ல. பயன்படுத்துவதை முன்கூட்டியே நிறுத்துவது, அறிகுறிகளை திரும்பவும் தோன்றச் செய்யும். சுருக்கமாக சொல்வதென்றால், ஆஸ்த்மா மற்றும் சிஓபீடி போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க இன்ஹேலர்கள் அவசியமானது, மற்றும் அதற்கு அடிமையாவதை விளைவிப்பதில்லை. உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த காலம் வரையில் இன்ஹேலர்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

தவறான நம்பிக்கை # 2 - இன்ஹேலர்கள் பயன்படுத்தினால் குழந்தைகளின் வளர்ச்சி குறைகிறது.

இதுவும் இன்ஹேலர்கள் பற்றிய மிக பொதுப்படையாகநிலவும் ஒரு தவறான கருத்தாகும். இன்ஹேலர்கள் பக்கவிளைவுகள் எதையும் கொண்டிருக்கவில்லை, ஏனெனில் மருந்தளிப்பு மிகச்சிறிய டோஸ்களில் நுரையீரல்களுக்குள் நேரடியாக விநியோகிக்கப்படுகிறது. உண்மையில், வழக்கமாக மற்றும் பரிந்துரைக்கப்பட்ட டோஸ்களில் எடுக்கும் போது, சுவாசப் பிரச்சனைகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தும் பாதுகாப்பான வகை மருந்தளிப்பு இன்ஹேலர்கள் ஆகும். பரவலான நம்பிக்கைக்கு நேர் மாறாக, சுவாசப் பிரச்சனைக்கு சிகிச்சையாக வழக்கமாக இன்ஹேலர்களை பயன்படுத்திய குழந்தைகள், இயல்பாக வயது வந்தவர்களுக்கு உரிய உயரத்துக்கு வளர்ந்துள்ளனர்.

தவறான நம்பிக்கை # 3 - உட்சுவாசிக்கும் ஸ்டெராய்ட்கள் தீங்கானது

நீங்கள் இன்ஹேலரை பயன்படுத்தும் போது, மருந்தளிப்பு பிரச்சனைக்குரிய பகுதியான - நுரையீரல்களை - நேரடியாக சென்றடைகிறது. ஆகவே, இன்ஹேலர் மூலமாக நுரையீரல்களுக்கு விநியோகிக்கப்படும் மருந்தின் அளவு மிகவும் குறைவாகும். அந்த சிறிய அளவுகள் தீங்கு எதையும் விளைவிக்காது. இன்ஹேலர்களை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் உட்பட யார் வேண்டுமானாலும் பாதுகாப்பாக எடுக்க முடியும். த்துடன் கூடுதலாக, இன்ஹேலர் மருந்தளிப்பில் பயன்படுத்தப்படும் ஸ்டெராய்ட் வகை தடகள வீரர்கள் மற்றும் பாடி பில்டர்கள் தத்தமது செயல்திறனை மேம்படுத்துவதற்காக பயன்படுத்துவதை ஒத்திருப்பது அல்ல. ஆகவே, இன்ஹேலர்கள் காரணமாக உங்களுக்கு எந்தவொரு வகையான பக்கவிளைவு ஏற்படும் வாய்ப்பு கிட்டத்தட்ட பூஜ்யமாகும். உண்மையில், நீங்கள் இன்ஹேலரை பயன்படுத்தாமல் இருப்பதை விட, அதனை முறையாக பயன்படுத்தி வருவதால் உங்களுக்கு எந்தவொரு தீங்கும் விளையாது.

தவறான நம்பிக்கை # 4 - இன்ஹேலர்கள் கடைசி தீர்வாக உள்ளது

ஆஸ்த்மா மற்றும் சிஓபீடி போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க இன்ஹேலர்கள் கடைசி தீர்வு மருந்தல்ல, ஆனால் முதல் நிலை மருந்தாகும். சுவாசப் பிரச்சனைகள் பெரும்பாலானவற்றுக்கு மிகவும் செயல்திறனுள்ள, பாதுகாப்பான மற்றும் செளகரியமான சிகிச்சை முறையாக உலகம் முழுவதுமே இன்ஹேலர்களே கருதப்படுகிறது. உடனடி மற்றும் நீண்ட-கால நிவாரணத்தை வழங்குவதற்காக பிரச்சனை உள்ள பகுதிகளான நுரையீரல்கள் மற்றும் காற்றுப்பாதைகளை மருந்து நேரடியாகசென்றடைவதை இன்ஹேலர்கள் சாத்தியமாக்குகின்றன. ஆஸ்த்மா மற்றும் சிஓபீடி போன்ற உங்கள் சுவாசப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க இன்ஹேலஷன் தெரபியே மிகச் சிறந்த வழிமுறையாகும் என்பதால், நீங்கள் விரும்பும் மற்றும் சந்தோசப்படும் அனைத்தையும் நீங்கள் தொடர்ந்து செய்ய முடியும் மற்றும் கவலை எதுவுமின்றி இயல்பான ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும்.

Please Select Your Preferred Language