உத்வேகம்

இலக்குகளை பெரிதாக அமைத்திடுங்கள்

ஜஹான் ஒரு போதும் ஒரே இடத்தில் அமைதியாக இருப்பதில்லை. அதனால் பெரிய மற்றும் சிறிய காயங்கள் அவனுக்கு வீட்டில் ஏற்படுவது ஒரு வாராந்திர நிகழ்வாக ஆகிப் போனது. அப்படி இருந்தும் அவன் செய்ய விரும்பியதை ஒரு போதும் அவன் நிறுத்தியதில்லை. நான் ஒப்புக்கொள்கிறேன், எனக்கு அவனைப் பற்றிய பயம் கொஞ்சம் இருந்தது, ஒவ்வொரு பெற்றோருக்கும் அவர்களின் குழந்தை பற்றி இருப்பது போல் தான். ஆனால் எனது மனக்கிலேசம் ஒரு நாள் அப்பட்டமான பயமாக மாறும் என்று எனக்கு கொஞ்சம் கூட தெரியவில்லை.

 

ஜஹானுக்கு 4 வயது இருக்கும் போது அவன் மூச்சுத்திணறிய நிலையில் வீடு திரும்பினான். அவன் படிக்கட்டுகளில் ஓடி ஏறி வந்திருக்க வேண்டும் என்பதால் அவனுக்கு மூச்சிரைக்கிறது என்று அது பற்றி நாங்கள் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் சிறிது நேரம் கழித்தும் அவனால் இயல்பாக மூச்சு விட முடியாமல் இருப்பதை பார்த்தப் பிறகு தான் ஏதோ தவறு உள்ளது என்பதை நாங்கள் உணர்ந்தோம். பயத்தில் முழுமையாக ஆழ்ந்த நிலையில், எங்களால் முடிந்த ஒரே விஷயம் என்னவென்றால்; அவனை உடனடியாக மருத்துவமனைக்கு நாங்கள் கொண்டு சென்றோம்.

 

மருத்துவரிடம் என்ன நடந்தது என நாங்கள் விளக்கம் கொடுக்கும் முன்பே, ஜஹானின் மூக்கு மற்றும் வாயை மூடி ஒரு ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டு ஐசியூ உள்ளே அவன் கொண்டு செல்லப்பட்டான். இதனால் எங்களுக்கு உண்டான பீதியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நாங்கள் அவனை இழந்து விடுவோம் என்றே நான் நினைத்தேன்.

 

சில மணிநேரம் கழித்து மருத்துவர் கூறிய தகவல் எங்களுக்கு நிம்மதியையும் அதே சமயத்தில் எங்கள் மனதில் இருந்த பயத்தை திரும்பவும் தூண்டியது - அதாவது ஜஹானுக்கு ஆபத்து எதுவும் இல்லை. ஆனால் அவனுக்கு ஆஸ்த்மா உள்ளது. எங்களுக்கு இருந்த பயத்திலும் மற்றும் ஆஸ்த்மா பற்றி அதிகமாக தெரியாததாலும் மருத்துவரிடம் நாங்கள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டோம் - ''அவன் இயல்பு நிலைக்கு திரும்புவானா?''  ''அவனுக்கு ஏன் வந்தது?'  ''அவனுக்குள்ள ஆஸ்த்மாவை குணப்படுத்த வழி எதுவும் உள்ளதா?''  ''அவன் தொடர்ந்து கால்பந்து விளையாட முடியுமா?"  ''இவ்வளவு சிறு வயதிலேயே அவனுக்கு ஆஸ்த்மா எப்படி வந்தது?".

 

இதன் பிறகு ஆஸ்த்மா பற்றியும் மற்றும் ஜஹானுக்கு சிகிச்சையாக இன்ஹேலர்கள் எப்படி சிறந்த வழியாக இருக்கும் என எல்லாவற்றை மருத்துவர் விளக்கினார். இன்ஹேலர்கள் எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் மீண்டும் கேள்விகளை கேட்கத் தொடங்கினோம் - 'அவனுக்கு ஏன் இன்ஹேலர்கள் தேவை?'  'அவை வயது வந்தவர்கள் எடுப்பதற்கு மட்டும் தானே?'  'சிகிச்சையில் கடைசி கட்டமாக  கொடுக்கப்படுவது தானே அது?'  'இன்ஹேலர்களில் ஸ்டெராய்ட் இருக்கிறது தானே?'  'ஸ்டெராய்ட்கள் ஜஹானின் வளர்ச்சியை பாதிக்காதா?"

 

அதன் பிறகு இன்ஹேலர்கள் பற்றிய தவறான நம்பிக்கைகளை மருத்துவர் விவரிக்கத் தொடங்கினார் மற்றும் அவை காற்றுப்பாதைகள் திறக்க எப்படி உதவி செய்து மனிதர்கள் நன்றாக சுவாசிக்க உதவுகிறது என்பதையும் எடுத்துக் கூறினார். இருப்பினும் எங்களுக்கு இன்ஹேலர்கள் பற்றி கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது, ஆனாலும் ஜஹானுக்கு உதவ இது தான் சிறந்த வழி என்பதால் சமாதானம் அடைந்தோம். மேலும், இன்ஹேலர்களை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பதை நாங்கள் கற்றுக் கொண்டு ஜஹானுக்கும் சொல்லிக் கொடுத்தோம்.

 

ஆனால் இன்ஹேலேஷன் தெரபி கொடுத்து வந்தாலும் கூட, நாங்கள் அவனை கவனமாக கண்காணித்து வந்தோம். அவன் சாப்பிடும் மற்றும் பருகும் ஒவ்வொன்றையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வந்தோம். ஜஹான் எதற்காவது வீட்டிலிருந்து வெளியே சென்றாலே எங்களுக்கு பயம் உண்டாகி விடும், இப்படியிருக்க அவன் எந்தவொரு விளையாட்டை விளையாடும் கேள்விக்கே இடமில்லை. அவனுக்கு கெடுதல் எதுவும் ஏற்படாமல் இருக்க, இயன்றவரையில் எங்களுடன் நெருக்கமாக அவனை வைத்துக் கொள்ளவே நாங்கள் விரும்பினோம்.

 

இன்ஹேலேஷன் தெரபியின் மகிமையை நாங்கள் மெதுவாக கவனிக்கத் தொடங்கினோம். அவனால் நன்றாக சுவாசிக்க முடிவதையும் மற்றும் அவனது மனவுறுதி திரும்ப வருவதையும் நாங்கள் பார்த்தோம். ஆஸ்த்மா தாக்குகளை தூண்டி விடுபவற்றை தவிர்ப்பது மற்றும் இன்ஹேலர்களை முறையாக பயன்படுத்தி மருத்துவர்களை அவ்வப்போது சந்தித்ததும், ஆஸ்த்மாவை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க ஜஹானுக்கு உதவியது.

 

இப்போது 12 வயதாகும் ஜஹான், மிக சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் நிறைந்த ஒரு சிறுவனாக மீண்டு வந்து விட்டான். அவன் ஒரு சிறந்த நீச்சல் மற்றும் கால்பந்து வீரராக விளங்குகிறான். அவன் விரும்பியதை எல்லாம் சாப்பிடுகிறான், மற்றும் அவனது வயதுக்கேற்ற ஒரு அற்புதமான சமையல் வித்தகராகவும் இருக்கிறான். ஜஹானை பார்க்கும் யாரும் அவனுக்கு ஆஸ்த்மா இருப்பதாக நம்புவதில்லை, அவ்வளவு ஏன், வெளிப்படையாக சொன்னால் சில நேரங்களில் எங்களால் கூட நம்ப முடியவில்லை தான்!

Please Select Your Preferred Language