சிஓபிடி

உங்களுக்கு சிஓபீடி எப்படி வருகிறது (காரணங்கள்)

இதர பல சுவாசப் பிரச்சனைகள் போலல்லாமல், நீங்கள் சிஓபீடி உடன் பிறக்கவில்லை. ஆகவே அந்நோய்க்கு எதிராக உங்களை தற்காத்துக் கொள்வது மிகவும் சாத்தியமானதே. சிஓபீடி நோயை ஏற்படுத்தும் சில காரணிகளின் தாக்கத்துக்கு நீண்ட காலத்துக்கு நீங்கள் உட்பட்டிருந்ததன் காரணமாக அந்நோயால் நீங்கள் அவதிப்பட நேர்கிறது.

 

சிஓபீடி உள்ள பெரும்பாலான மனிதர்களுக்கு, குறைந்தது சில காலம் புகைப்பிடித்த வரலாறு இருக்கும். சிஓபீடி ஏற்படுவதற்கான மிக பொதுப்படையான காரணமாக புகைத்தல் இருந்தாலும், இதர புகை மற்றும் தூபம் வடிவங்களில் இருந்து தீங்கான துணுக்குகள்/எரிச்சலூட்டுபவைகளின் தாக்கத்துக்கு தொடர்ந்து உள்ளாவது சிஓபீடி ஏற்படும் அபாய‌த்தையும் அதிகரிக்கிறது. ரசாயனம் அல்லது சமைக்கும் போது எழும் புகை, தூசு, வீட்டினுள் அல்லது வீட்டுக்கு வெளியே காற்று மாசு, மற்றும் சுற்றுப்புறங்களில் காற்றோட்டம் மோசமாக இருக்கும் இடங்களில் இரண்டாம்-நிலை புகைத்தலுக்கு ஆளாவது ஆகியன சிஓபீடி ஏற்படுவதற்கான வேறு சில காரணங்களாகும்.

காலப்போக்கில், புகையிலையில் இருந்து எழும் புகை அல்லது இதர தீங்கான துணுக்குகள் காற்றுப்பாதைகளை எரிச்சலூட்டி நுரையீரலின் நீட்சிதன்மை உள்ள நாரிழைகளை பாதிக்கிறது.

சிஓபீடி 40 வயதுக்கு அதிகமான மனிதர்களுக்கு மிக பொதுவாக இருக்கிறது, ஏனெனில் சேதமடைந்த நுரையீரல் சிஓபீடி அறிகுறிகளை உண்டாக்க வழக்கமாக பல ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது.

Please Select Your Preferred Language