அலர்ஜி ரினிடிஸ்

சிகிச்சை

ஒவ்வாமை ரினிடிஸ்–க்கான சிறந்த சிகிச்சை, உங்களால் இயன்ற வரையில் உங்களின் ஒவ்வாமை ஊக்கிகளை தவிர்க்க முயற்சிப்பதாகும்.

ஒவ்வாமை ஊக்கிகளை எப்படி தவிர்ப்பது

வெளிப்புற ஒவ்வாமை ஊக்கிகள் தாக்கத்தை தவிர்க்க நீங்கள், உதாரணத்துக்கு, பின்கூறப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகளை எடுக்க முடியும்:

மகரந்த காலத்தின் போது, நண்பகல் மற்றும் பிற்பகல் நேரங்களில் அல்லது வெளியே காற்று அதிகம் வீசும் போது வீட்டுக்குள் இருக்கவும், ஏனெனில் இந்த நேரங்களில் காற்றில் உள்ள மகரந்த துகள்கள் வழக்கமாக அதிகமாக இருக்கும்.

தோட்ட வேலை செய்கையில் அல்லது தூசு உள்ள இடத்துக்கு செல்லும் போது ஒரு முகக்கவசம் அணியவும்.

துணிகள் மற்றும் துண்டுகளை வெளியே காயப் போடாதீர்கள், ஏனெனில் மகரந்த துகள் மற்றும் தூசு அவற்றில் ஒட்டி விடும்.

நீங்கள் வெளியே இருக்கும் போது உங்கள் கண்களை பாதுகாக்க எப்போதுமே கண்ணாடிகள்/குளிர்கண்ணாடிகள் அணியவும் மற்றும் கண்களை கசக்குவதை தவிர்க்கவும்; அவ்வாறு செய்தால் கண்களுக்கு எரிச்சலூட்டி உங்களுக்குள்ள அறிகுறிகளை இன்னும் மோசமாகி விடும்.

வீட்டுக்குள் ஒவ்வாமை ஊக்கிகள் தாக்கத்தை தவிர்க்க நீங்கள், உதாரணத்துக்கு, பின்கூறப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகளை எடுக்க முடியும்:

ஜன்னல்களை அடைத்து வைக்க முயற்சிக்கவும்

தரையை உலர்வாக தூசு தட்ட அல்லது பெருக்குவதற்கு பதிலாகஒரு ஈரத்துணி அல்லது மாப் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.

சுவர்களில் மோல்ட்கள் (பூஞ்சை), ஏதேனும் இருந்தால் அதனை ஒழிக்க அவ்வப்போது சுத்தப்படுத்தவும்.

உங்கள் போர்வைகள், தலையணை உறைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை அடிக்கடி சுடுதண்ணீரில் துவைக்கவும்.

தரைவிரிப்பு மற்றும் திரைச்சீலைகளை அவ்வப்போது சுத்தப்படுத்தவும்

தூசு பூச்சிகளின் தாக்கத்தை குறைக்க உங்கள் படுக்கையில் - தலையணைகள், மெத்தை, கம்ஃபர்டர்ஸ் இத்யாதி என அனைத்துக்கும் மைட்-ப்ரூஃப் கவர்களை பயன்படுத்தவும்.

உங்கள் வீட்டில் ஈரப்பதம் அளவுகளை இயன்றவரையில் குறைவாக வைக்கவும் (நீங்கள் ஒரு டீ-ஹியூமிடிஃபையர் பயன்படுத்த முடியும்), இதனால் பூஞ்சைகள் இருக்காது.

குளியலறைகள், சமையலறை, பரண் மற்றும் அடித்தளம் போன்ற இடங்களை அவ்வப்போது சுத்தம் செய்யவும்.

உங்கள் கார் மற்றும் வீட்டில் உள்ள குளர்சாதன இயந்திரம் சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்தவும்

செல்லப்பிராணிகள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதாக இருந்தால், நினைவில் கொள்ளுங்கள் இவற்றை-

செல்லப்பிராணி எதையாவது தொட்ட பிறகு உடனே உங்கள் கைகளை கழுவுங்கள்

செல்லப்பிராணி வைத்துள்ள ஒரு நண்பரை சந்தித்து வந்த பிறகு உங்கள் ஆடைகளை நன்றாக துவைக்கவும்.

உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளை வீட்டுக்கு வெளியே வைத்திருக்கவும்.

மருந்தளிப்பு

உங்களுக்குள்ள ஒவ்வாமை ரினிடிஸ்–க்கு சிகிச்சை அளிக்க உதவ பல்வேறு மருந்துகளையும் நீங்கள் பயன்படுத்த முடியும். உங்களுக்குள்ள அறிகுறிகளின் கடுமைத்தன்மை மற்றும் வகையை பொறுத்து, மூக்கு ஸ்பிரேகள், மாத்திரைகள், கண் சொட்டு மருந்துகள், சிரப்கள் மற்றும் இம்மியூனோதெரபி அல்லது உங்களின் ஒவ்வாமை மிகவும் கடுமையாக இருந்தால் ஒவ்வாமை தடுக்கும் ஊசி போன்ற மருந்தளிப்புகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

ஒவ்வாமை ரினிடிஸ்–க்கு சிகிச்சை அளிக்க உலகம் முழுவதுமே, நாசல் ஸ்பிரே ஒரு செயல்திறனுள்ள வழிமுறையாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாசல் ஸ்பிரே மருந்தை நேரடியாக பிரச்சனையுள்ள பகுதிக்கு அதாவது மூக்கில் விநியோகிக்கிறது. மருந்தளிப்பு மூக்கின் உள்ளே நேரடியாக செல்வதால், அதன் டோஸ் குறிப்பிடத்தக்க வகையில் குறைவாக உள்ளது, இதன் அர்த்தம் நாசல் ஸ்பிரே குறைந்தபட்ச பக்கவிளைவுகளை கொண்டது என்பதாகும். உங்களுக்குள்ள ஒவ்வாமை ரினிடிஸ்–க்கு சிகிச்சை பெறுவது முக்கியமாகும், ஏனெனில் அதற்கு உரிய காலத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் அது காதில் நோய்த்தொற்றுகள், சைனசிடிஸ் மற்றும் மூக்கில் கட்டிகள் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுத்திடும்.

 

Please Select Your Preferred Language