ரகசியத்தன்மை கொள்கை

www.breathefree.com” (இதன் பிறகு ''இணையதளம்" என்றே குறிப்பிடப்படும்) என்ற இந்த இணையதளத்தை அணுகுவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு முன்பு இந்த ரகசியத்தன்மை கொள்கை உறுதிமொழியை நீங்கள் கவனமாக வாசித்து மற்றும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று சிப்லா லிமிடெட் உங்களை வலியுறுத்துகிறது. இந்த இணையதளத்தை நீங்கள் அணுகி பார்த்தால் அல்லது பயன்படுத்தினால், விதிவிலக்குகள் எதுவுமின்றி இந்த ரகசியத்தன்மை கொள்கை உறுதிமொழிக்கு கட்டுப்பட நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். இந்த ரகசியத்தன்மை கொள்கை உறுதிமொழிக்கு நீங்கள் சம்மதிக்காவிட்டால், இந்த இணையதளத்தை நீங்கள் அணுகவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. இந்த தகவலில் எந்தவொரு நேரத்திலும், முன்னறிவிப்பு எதுவுமின்றி எதையும் சேர்க்க, நீக்க அல்லது மாற்றம் செய்யும் உரிமை சிப்லா லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள், அதன் சார்பு நிறுவனங்கள் மற்றும் அதன் குழும நிறுவனங்களுக்கு (இதன் பிறகு ''சிப்லா'' என்றே குறிப்பிடப்படும்) உள்ளது.

 

தனிப்பட்ட அடையாளம் காணத்தக்க தகவலை சேகரித்தல்

1. தனிப்பட்ட அடையாளம் காணத்தக்க தகவல் எதையும் தானாகவே சேகரிக்கும் மற்றும்/அல்லது பெறும் விதத்தில் இந்த இணையதளம் வடிவமைக்கப்படவில்லை. நீங்கள் இந்த இணையதளத்தை அணுகி மற்றும்/அல்லது தனிப்பட்ட அடையாளம் காணத்தக்க தகவல் எதையும் வழங்கினால் ஒழிய, உங்களை தனிப்பட்ட முறையில் சிப்லாவால் அடையாளம் காண முடியாது. 

2. தகவலை முனைப்பாக சேகரித்தல்: இந்த இணையதளத்தில் தரவு கட்டங்களில் நீங்கள் உள்ளீடு செய்யும் தனிப்பட்ட தகவலை சிப்லா சேகரிக்கிறது. உதாரணத்துக்கு பல்வேறு தகவல்களை பெற ஏதுவாக உங்கள் பெயர், அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் முகவரி, மற்றும்/அல்லது இதர தகவலை நீங்கள் சமர்ப்பிக்கலாம். உங்களை பற்றிய ரகசியத்தன்மையை பாதுகாக்க, பிரத்யேகமாக கோரப்படாத தகவல் எதையும் நீங்கள் சிப்லாவுக்கு வழங்கக் கூடாது.

3. தகவல் தானாக சேகரிக்கப்படுதல்: சிப்லா இணையதளத்தில் நீங்கள் பார்க்கும் போது, நீங்கள் தகவல் எதுவும் சமர்ப்பிக்காமலேயே, நீங்கள் பார்த்தது பற்றிய தகவலை சிப்லா இணையதளங்கள் தானாகவே சேகரிக்கலாம். இந்த தகவல் குக்கீஸ், இன்டர்நெட் டேக்ஸ், மற்றும் வெப் பீகான்ஸ் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சேகரிக்கப்படலாம்.  நீங்கள் சற்று முன்பு பார்த்த இணையதளத்தின் யுஆர்எல், இன்டர்நெட் ப்ரோட்டோகால் (ஐபி) முகவரிகள், ஜிபிஎஸ் அமைவிட தரவு, மொபைல் போன் சேவை வழங்குபவர், இயங்குதளத்தின் விவரங்கள், உங்கள் கணினியின் ப்ரவுசர் வடிவம் போன்ற இந்த தகவலில் சிலவற்றை இந்த இணையதளம் சேகரிக்கலாம். தகவல் தானாகவே சேகரிக்கப்படும் தொழில்நுட்பங்கள் சிப்லா வழங்கும் சேவையை மேம்படுத்திட, நுகர்வோர் விருப்பங்கள் அடிப்படையில் இணையதளத்தை தனிப்பயனாக்குவது, புள்ளிவிவர தொகுப்பு, டிரென்ட்களை பகுப்பாய்வு செய்வது மற்றும் இதரவகையில் இணையதளத்தை மேம்படுத்தி நீங்கள் அதனை சுலபமாக பயன்படுத்திட வகை செய்யும். இந்த தொழில்நுட்பங்களால் சேகரிக்கப்படும் அந்த தகவல், அடையாளம் காணத்தக்க கூடுதல் தகவல் எதுவுமின்றி உங்களை அடையாளப்படுத்த பயன்படுத்த முடியாது.

தனிப்பட்ட அடையாளம் காணத்தக்க தகவலை பயன்படுத்தும் உத்தேசம்

4. நீங்கள் இணையதளம் மூலமாக வழங்கும் தனிப்பட்ட தகவலை உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க, செயல்திறனுள்ள தகவல் தொடர்பை கொண்டிருக்க மற்றும் வாடிக்கையாளர் சேவையை உங்களுக்கு சிறப்பாக வழங்கிட சிப்லா பயன்படுத்தும். இந்த‌ இணையதளத்தில் உங்களின் தனிப்பட்ட தகவலை ஒரு படிவம் அல்லது தரவு தளத்தில் நீங்கள் உள்ளீடு செய்ததும் உங்களின் தனிப்பட்ட விருப்பங்கள், அதாவது நீங்கள் அடிக்கடி பார்க்கும் இணையதளத்தின் பிரிவுகள் மற்றும் , நீங்கள் தெரிவு செய்தால் உங்களின் பயனர் ஐடி போன்றவற்றை அந்த இணையதளம்  ''நினைவில்" வைக்க அனுமதிக்க குறிப்பிட்ட சில அடையாளம் காணும் தொழில்நுட்பங்களை சிப்லா பயன்படுத்தலாம்.

5. உரித்தாகும் அனைத்து சட்டங்களுக்கு இணக்கமாக சிப்லா உங்கள் தகவலை சேகரிக்கும், சேமித்து வைக்கும் மற்றும் பயன்படுத்தும். சிப்லா பெறும் தனிப்பட்ட தகவலின் அளவு மற்றும் வகையை, இணையதளத்தில் உள்ள படிவங்கள் அல்லது தரவு தளங்களில் தனிப்பட்ட தகவல் எதையும் உள்ளீடு செய்வதை தேர்ந்தெடுக்காமல் இருப்பதன் மூலம் நீங்கள் அதனை கட்டுப்படுத்த முடியும். நீங்கள் பொருத்தமான தனிப்பட்ட தகவலை எங்களுக்கு வழங்கினால் மட்டுமே எங்களின் ஆன்லைன் சேவைகளில் சிலவற்றை உங்களுக்கு நாங்கள் வழங்க முடியும். மேலும் ஆஃபர்கள், புரொமோஷன்ஸ் மற்றும் உங்களுக்கு ஆர்வமுள்ள கூடுதல் சேவைகள் பெற எங்களின் தொடர்பு பட்டியலுக்குள் வருவதை நீங்கள் தேர்வு செய்கிறீர்களா அல்லது இல்லையா என்பதை இணையதளத்தின் இதர பாகங்கள் உங்களிடம் கேட்கலாம்.   நீங்கள் அவ்வாறு வருவதை தேர்வு செய்தால், இந்த தகவலை சந்தைப்படுத்த மற்றும் ப்ரமோஷனல் நோக்கத்துக்காக நாங்கள் பயன்படுத்துவோம். உதாரணத்துக்கு, பொருத்தமான சட்டம் மற்றும் உங்களின் சம்மதத்துக்கு ஏற்ப உங்களுக்கு செய்தி மற்றும் செய்திமடல்கள், பிரத்யேக சலுகைகள் மற்றும் ப்ரொமோஷன்களை உங்களுக்கு அனுப்பவும், மற்றும் உங்களுக்கு ஆர்வமிருக்கும் என நாங்கள் நினைக்கும் பொருட்கள் அல்லது தகவல் பற்றி தெரிவிக்க உங்களை தொடர்பு கொள்ளவும் உங்களின் மின்னஞ்சல் முகவரியை நாங்கள் பயன்படுத்துவோம்.  

ஸ்பேம்மிங்

6. சிப்லா 'ஸ்பேம்மிங்" (தேவையற்றது) ஆதரிப்பதில்லை. ஸ்பேம்மிங் என்பது கோரப்படாத மின்னஞ்சல்கள், வழக்கமாக வர்த்தகரீதியிலான தன்மையை கொண்டவை அதிக எண்ணிக்கையிலும் மற்றும் திரும்ப திரும்ப அனுப்புநருடன் முன்பு தொடர்பில் இருந்திராத அல்லது அந்த தகவல் தொடர்புகளை பெற மறுத்து விட்ட தனிநபர்களுக்கு அனுப்பி வைப்பது என விவரிக்கப்படுகிறது. இதற்கு மாறாக, சிப்லா தனது பார்வையாளர்களுக்கு அவர்கள் வெளிப்படுத்திய ஆர்வமுள்ள பகுதிக்கு அவ்வப்போது மின்னஞ்சல்களை அனுப்பி வைக்கும், எனினும் அந்த சேவையை பெறுவதில் இருந்து விலகும் தெரிவும் உங்களுக்கு கொடுக்கப்படும்.

தகவலை வெளிப்படுத்தாமல் இருத்தல்

7. இணையத்தில் உள்ள தனிப்பட்ட தகவலை சிப்லா, சிப்லா கூட்டு செயற்திட்டங்களை மேற்கொள்ளக் கூடிய குறிப்பிட்ட சில நிறுவனங்கள், மற்றும் தனிநபர்கள் மற்றும் சிப்லாவுக்கான வர்த்தக செயல்பாடுகளை மேற்கொள்ள சிப்லா ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிறுவனங்கள் ஆகிய தரப்புகள் அணுகிப் பார்க்கலாம்.

8. உங்களின் தனிப்பட்ட தகவலை வேறு யாருக்கும் சிப்லா விற்காது அல்லது வாடகைக்கு விடாது.

9. இந்த தனிப்பட்ட தகவலை மூன்றாவது தரப்பு உடன், மேற்கொண்டு செயலாக்கம் செய்ய அல்லது தனது தொழில் உடன் இணைக்க தேவைப்பட்டால், சிப்லா பகிர்ந்துக் கொள்ளலாம். இந்த காலக்கட்டத்தில் பகிர்ந்துக் கொள்ளப்பட்ட தகவல் மூன்றாவது தரப்புடன் செய்துக் கொள்ளப்பட்ட ரகசியத்தன்மை ஒப்பந்தம் மற்றும் தகவல் முதலில் சேகரிக்கப்பட்ட உத்தேச நோக்கத்துக்குரிய‌ பொருத்தமான சட்டத்துக்கு இணங்க செய்யப்படும் மற்றும் அந்த மூன்றாவது தரப்புகள் அனைத்தும் சிப்லாவின் ரகசியத்தன்மை கொள்கையை பின்பற்றுவதும் உறுதி செய்யப்படும்.

10. உங்களின் தனிப்பட்ட தகவலை பொருத்தமான சட்டத்தின் உத்தரவுக்கு இணங்கி விடுவிக்கும் தேவை உள்ளதாக நாங்கள் நம்பினால் நாங்கள் அதனை வெளியிடலாம். தனிப்பட்ட ஆரோக்கிய தகவலை சட்டம் அல்லது ஒழுங்குமுறை உத்தரவின் கீழ் வெளியிடும் நிர்ப்பந்தம் உள்ளது என்பதை மீளாய்வுக்கு பிறகு நாங்கள் தீர்மானித்தாலும் நாங்கள் வெளியிடலாம்.

தனிப்பட்ட தகவலை பாதுகாத்தல்

11.  தனிப்பட்ட அடையாளம் காணத்தக்க தகவலை பாதுகாத்திட சிப்லா போதுமான தொழில்நுட்ப மற்றும் அமைப்புரீதீயிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை பராமரிக்கும்.

12. தனிப்பட்ட தகவலை சேகரிக்கும் ஒவ்வொரு இணைய பக்கத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பதை ஒரு கோட்பாடாக சிப்லா கொண்டுள்ளது; எனினும், இணையத்தில் பரிமாற்றம் செய்யப்படும் தனிப்பட்ட தகவலின் ரகசியத்தன்மைக்கு உத்தரவாதமளிக்க முடியாது. இணையத்தின் வழியே தனிப்பட்ட தகவலை பரிமாற்றம் செய்கையில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு உங்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

13. உத்தேசிக்கப்பட்ட நோக்கத்துக்காக அந்த தகவல் சேகரிக்கப்பட்ட அல்லது சமர்ப்பிக்கப்பட்டப் பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு உங்களின் தகவலை சேமித்து வைக்க சிப்லா கடமைப்படவில்லை.

இதர இணையதளங்களுக்கான இணைப்புகள்

14. இந்த ரகசியத்தன்மை கொள்கை சிப்லாவின் இணையதளத்துக்கு மட்டுமே பொருந்தும். வேறு இணையதளங்களுக்கான இணைப்புகளை சிப்லா வழங்கலாம், அது உங்களுக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். அந்த இணையதளத்தில் உள்ள பொருளடக்கம், அந்த இணையதள இணைப்புகளை நீங்கள் அணுகுவது, நீங்கள் வழங்கும் தனிப்பட்ட தகவல் அல்லது அந்த இணையதளத்தால் சேகரிக்கப்படும் எந்தவொரு தகவலின் பாதுகாப்புத்தன்மைக்கு சிப்லா பொறுப்பாகாது. அந்த இணையதளங்களை அணுகிப் பார்க்கும் அபாயம் முற்றிலும் உங்களை சார்ந்தது.

இன்னொரு வெளிப்புற இணையதளத்தின் ஹைப்பர்லிங்க்கில் நீங்கள் க்ளிக் செய்யும் போது, அந்த புதிய வெளிப்புற இணையத்தின் ரகசியத்தன்மை கொள்கைக்கு நீங்கள் உட்படுகிறீர்கள். இந்த புதிய வெளிப்புற இணையதளத்தின் மூலமாக நீங்கள் ப்ரவுஸ் செய்யும் போது சிப்லா லிமிடெட்டோ, அதன் இயக்குநர்கள், முகமைகள், அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் என யாருமே அந்த வெளிப்புற இணையதளத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ள எந்தவொரு தகவலின் துல்லியத்தன்மை, நம்பகத்தன்மை அல்லது காலம் தவறாமைக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை; அதே போல் எந்தவொரு பொருளடக்கம், கருத்துகள், பொருட்கள், அல்லது இணைக்கப்பட்டுள்ள சேவைகளையும் அவர்கள் ஆதரிப்பதில்லை மற்றும் அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் துல்லியத்தன்மை, நம்பகத்தன்மை அல்லது காலம் தவறாமையை நம்பியதால் ஏற்பட்ட இழப்புகள் எதற்கும் பொறுப்பாக்க முடியாது.

எங்கள் இணையதளத்தை குழந்தைகள் பயன்படுத்துதல்

15. இணையதளத்தில் குழந்தைகளிடம் (18 வயதுக்கு கீழ்பட்ட மைனர்களை ''குழந்தைகள்" என்று நாங்கள் குறிப்பிடுகிறோம்) இருந்து எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் சிப்லா தெரிந்தே சேகரிக்காது அல்லது பயன்படுத்தாது. எங்களுடன் தகவல் தொடர்பு வைக்க, அல்லது எங்களது ஆன்லைன் சேவைகளில் எவற்றையேனும் பயன்படுத்த நாங்கள் தெரிந்தே குழந்தைகளை அனுமதிப்பதில்லை. நீங்கள் ஒரு பெற்றோராக இருந்து மற்றும் உங்கள் குழந்தை எங்களுக்கு தகவலை வழங்கியுள்ளது என்பது தெரிய வந்தால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.

இணையதளத்தில் உங்களின் தனிப்பட்ட தகவலை அணுகிப் பார்க்கும் உரிமை

16. நீங்கள் இணையதளத்தில் சுயமாக‌ உள்ளீடு செய்த உங்களின் தனிப்பட்ட தகவலை மீளாய்வு செய்ய, மாற்ற, சேர்க்க அல்லது நீக்க நீங்கள் விரும்பினால், உங்கள் ப்ரொஃபைலில் கிடைக்கும் “Edit” ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் அவ்வாறு செய்ய முடியும். பிரச்சனை ஏதேனும் இருந்தால், அதற்காக எங்களை தொடர்பு கொள்ளலாம்.

17. நீங்கள் எங்களுக்கு வழங்கிய தனிப்பட்ட தகவலை பயன்படுத்துவது, திருத்தம் செய்வது, அல்லது நீக்குவது பற்றிய கேள்விகள் உங்களிடம் இருந்தால், அல்லது ஒரு சிப்லா பிசினஸ் அல்லது ஒரு குறிப்பிட்ட சிப்லா திட்டத்தில் இருந்து வரும் எதிர்கால தகவல் தொடர்புகளில் இருந்து விலகிக் கொள்ள நீங்கள் விரும்பினால், நீங்கள் பார்க்கும் இணையதளத்தில் உள்ள "Contact Us" என்பதில் தயவு செய்து க்ளிக் செய்யவும் அல்லது  privacy@cipla.com என்ற முகவரிக்கு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இதற்கு மாற்றாக, எங்களுக்கு ஒரு கடிதத்தை நீங்கள் அனுப்பலாம் பின்கூறப்பட்டுள்ள 

முகவரிக்கு:

கவனிக்க: சட்ட துறை

சிப்லா லிமிடெட், டவர் ஏ, 1வது தளம், பெனின்சுலா பிசினஸ் பார்க்,

கண்பத் ராவ் கதம் மார்க், லோவ‌ர் பரேல், மும்பை - 400 013, இந்தியா

18.   சிப்லாவுக்கான அனைத்து தகவல் தொடர்புகளிலும், பதிவுக்காக (பொருந்தினால்) பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரி, இணையதள முகவரி மற்றும் உங்களின் கோரிக்கை பற்றிய ஒரு விரிவான விளக்கத்தையும் தயவு செய்து சேர்க்கவும். உங்களின் தனிப்பட்ட தகவலை நீங்கள் அழித்து விட அல்லது திருத்தம் செய்ய விரும்புகிறீர்கள் மற்றும் எங்களை மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்கிறீர்கள் எனில், தயவு செய்து மின்னஞ்சலின் சப்ஜெக்ட் லைனில் பொருந்தும் வகையில் "Deletion Request" அல்லது "Amendment Request", என்று குறிக்கவும். நியாயமான அனைத்து கோரிக்கைகளுக்கும் ஒரு உரிய நேரத்தில் பதிலளிக்க எங்களால் இயன்றதை நாங்கள் செய்வோம்.

கொள்கையில் மாற்றம்

19. தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சட்ட மற்றும் ஒழுங்குமுறையில் மாற்றங்கள் மற்றும் நல்ல தொழில்முறைகளுக்கு ஏற்றார் போல், முன்னறிவிப்பு எதுவுமின்றி இந்த ரகசியத்தன்மை கொள்கையில் திருத்தம் செய்யும் உரிமை சிப்லாவுக்கு உள்ளது. சிப்லா தனது ரகசியத்தன்மை கொள்கைகளை மாற்றினால், அந்த மாற்றங்கள் ஒரு புதிய ரகசியத்தன்மை கொள்கையில் இடம்பெறும் மற்றும் திருத்தப்பட்ட ரகசியத்தன்மை கொள்கையை நடைமுறைப்படுத்தும் தேதி இந்த பத்தியில் அமைக்கப்படும்.

20. இந்த ரகசியத்தன்மை கொள்கை கடைசியாக 1 அக்டோபர் 2017 அன்று நிகழ்நிலைப்படுத்தப்பட்டது மற்றும் அந்த தேதியில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

Please Select Your Preferred Language