உத்வேகம்

லைஃப் 2.0

இளமையாக இருப்பது பற்றிய விஷயம் இது தான் - அது அனைத்தும் வேடிக்கை மற்றும் வித்தியாசமான அனுபவங்கள்  நிறைந்ததாக உள்ளது. நமக்கு 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு பிறகு என்ன நடக்கப் போகிறது என்பதை நினைத்துப் பார்க்க நாம் தயாராக இல்லை. அப்படித்தான் எனது பிரச்சனை தொடங்கியது. நான் இளமையாக இருந்த போது, புகைப் பிடிக்கத் தொடங்கினேன், அது பின்னர் எனது வாழ்க்கையை எந்தளவுக்கு மோசமாக பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளவோ அல்லது உணரவோ இல்லை. பின்னர் பல தடவைகள் நான் புகைப்பதை விட முயற்சித்தேன், ஆனால் ''நான் புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள ஒரு சுதந்திரமான இளைஞன். அப்படி என்ன தான் மோசமாக நடந்து விடப் போகிறது?" என்று என்னை நானே கேட்டுக் கொண்டு அதற்கு நியாயம் கற்பித்துக் கொண்டேன்.

இதற்கு விடை வெறுமனே நான்கு எழுத்துகள் தான் - சிஓபீடி.

ஆரம்பத்தில் அறிகுறிகள் மிதமாக இருந்தன, லேசாக மூச்சுத்திணறல் அல்லது திரும்ப திரும்ப வரும் இருமல் போன்றவற்றை நான் அலட்சியப்படுத்தினேன். முதலில், அது வயதாவதால் வரும் அடையாளங்கள் என்று நினைத்தேன், மற்றும் அது பற்றி மிக அதிகமாக சிந்திக்கவில்லை. ஆனால் காலப்போக்கில், எனது நிலை மோசமடையத் தொடங்கியது. மளிகை சாமான்கள் வாங்குவது அல்லது கழிப்பறைக்கு செல்வது போன்ற சாதாரண விஷயங்களை செய்யும் போது கூட மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. கழிப்பறையை நான் தனியாக பயன்படுத்துவதற்கு கூட அஞ்சும் அளவுக்கு விஷயம் மோசமாக விட்டது, மற்றும் அடுத்து நான் படுக்கையில் விழுந்தது தான் தெரியும்.

பல்வேறு நிவாரணங்கள் மற்றும் ''சிகிச்சைகளை" முயற்சித்த பிறகும் பலன் எதுவும் இல்லாததால், எனது நிலையை மேம்படுத்த நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்பது எனக்கு தெரிந்தது. ஒரு மருத்துவரிடம் ஆலோசிக்கும் வரையில் எனக்கு சிஓபீடி இருக்கிறது என்பது தெரியவில்லை. அது பற்றி முதல் தடவையாக மருத்துவர் என்னிடம் கூறிய போது, அவர் எடுத்துக்கூட்டி பேசுவதாக நான் நினைத்தேன். நான் அவ்வாறு கூறியதும், புகைப்பிடித்தது எப்படி எனது நுரையீரல்கள் மற்றும் காற்றுப்பாதைகளை பாதித்தது, மற்றும் அதன் விளைவாக எனக்கு சிஓபீடி நோய் வந்ததை விளக்கினார்.

 

இது தான் எனது வாழ்க்கையின் முடிவு  என்று நான் உறுதியாக நினைத்தேன். பின்னர் மருத்துவர் என்னிடம், நான் சரியான சிகிச்சையை எடுத்துக் கொண்டு மற்றும் ஒரு சில வாழ்க்கைமுறை மாற்றங்களையும் செய்தால் சிஓபீடி-யை சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை ஊட்டினார். இன்று, நான் விரும்பியபடி எனது வாழ்க்கையை சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறேன். நான் புகைப்பிடிப்பதை கைவிட்டு சரியான சிகிச்சையை எடுத்து வருவதால், எனக்குள்ள சிஓபிடியை கட்டுப்படுத்த நான் சரியான பாதையில் செல்வதாக எனது மருத்துவர் கூறினார்.

எங்கேயும் தனியாக சென்று வரவோ அல்லது விரும்பிய எதையேனும் சாப்பிடவோ நான் இப்போது அச்சப்படுவதே இல்லை. என்னைப் போலவே, சிஓபீடி உள்ள மனிதர்கள் இது வாழ்க்கையின் முடிவு அல்ல என்பதையும் மற்றும் சரியான நோய்கண்டறிதல், சிகிச்சை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் உடன் நீங்களும் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்று நான் நம்புகிறேன்.

Please Select Your Preferred Language