சிஓபிடி

சிஓபீடி உடன் வாழ்வது

சிஓபீடி-யை சமாளிக்க முறையான சிகிச்சை மற்றும் மேலாண்மை தேவைப்படுகிறது. அதனை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து மற்றும் எளிதில் சமாளிக்க, உங்கள் மருத்துவரின் ஆலோசனையை நீங்கள் முழுமையாக பின்பற்ற வேன்டியதிருக்கும்.

ஒரு நபர் புகைப்பதை நிறுத்தி விட்டு மற்றும் மருந்தளிப்பை முறையாக எடுக்கத் தொடங்கியதுமே சிஓபீடி அறிகுறிகள் சில நேரங்களில் குறையத் தொடங்கும், நுரையீரலுக்கு மறுவாழ்வு அளித்த பிறகு அவர்கள் நிலை மேலும் மேம்படும். அறிகுறிகள் முற்றிலுமாக மறைந்து விடாது, என்றாலும், முறையான சிகிச்சை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் உடன் உங்கள் வாழ்க்கையை நீங்கள் தொடர்ந்து முழுமையாக வாழ முடியும். 

சுறுசுறுப்பான வாழ்க்கைமுறை

உங்கள் சுவாச மண்டலத்தை பலப்படுத்த நடத்தல் அல்லது யோகா போன்ற செயல்பாடுகள் உதவலாம், இதனால் அடிப்படையில் உங்களால் நன்றாக சுவாசிக்க முடியும்.

சிஓபீடி-யை கட்டுப்படுத்திட பிரத்யேக உணவுமுறை கட்டுப்பாடுகள் என எதுவுமில்லை, எனினும், உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு ஒரு முழுமையான உணவுமுறையை பின்பற்றுவது முக்கியமானது. மேலும், ஒரு ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் முறையான உடற்பயிற்சி இருந்தால், சிஓபீடி உங்களை மேலும் தொல்லைப்படுத்த காரணம் எதுவுமில்லை. 

மறுவாழ்வு செயல்திட்டம்

பெரும்பாலும், ஒரு பல்மொனரி அல்லது நுரையீரல் மறுவாழ்வு செயல் திட்டமானது உங்களின் பிரச்சனையை சமாளிக்க  எப்படி சுலப‌மாக சுவாசிப்பது, உடற்பயிற்சி மற்றும் நன்றாக சாப்பிடுவது என்று ஆலோசனையை வழங்குவதன் மூலம் வழிகாட்ட உதவலாம்.

ஆயத்தமாக இருத்தல்

அவசரநிலை தொடர்பு தகவலை எப்போதும் நீங்கள் அணுகக்கூடிய‌ ஓரிடத்தில் வைத்திருப்பதை உறுதிப்படுத்தவும். நீங்கள் அடிக்கடி பார்க்கும் ஒரு இடத்தில் - குளிர்பதனப் பெட்டி மற்றும் உங்கள் தொலைபேசி உள்ள இடம் போன்றவற்றில் உங்களின் அவசரநிலை எண்கள், மருந்துகள் மற்றும் டோஸ்களின் ஒரு பிரதியை ஒட்டி வைத்திருப்பது கூட விவேகமானது.

சுவாசிப்பதற்கு கஷ்டமாக இருந்தால், அது ஒரு அவசரநிலையாக இருக்கலாம் என்பதால் உடனடியாக உங்கள் மருத்துவரிடம் அல்லது மருத்துவமனைக்கு செல்லவும்.

உங்கள் நிலையை புரிந்து கொள்ளும் மற்றவர்களுடன் பேசுவது ஒரு நிவாரணம் தருவதாக இருக்கும் - ப்ரீத்ஃப்ரீ கம்யூனிட்டியில் இணைந்து மற்றும் தத்தமது சுவாசப் பிரச்சனைகளை வெற்றிக் கொண்ட ஆயிரக்கணக்கான மனிதர்களுடன் பேசுங்கள்.

Please Select Your Preferred Language