தொடர்ச்சியான இருமல்

மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்

இருமல் தொடர்ந்து இருப்பதால் முறையான மருத்துவக் கவனிப்பு தேவை, ஏனெனில் அது ஒரு ஆழமான பிரச்சனையை வெளிப்படுத்தும் ஒரு அறிகுறியாக இருக்கக் கூடும். கீழ் குறிப்பிட்டப்படி

இருந்தால், நீங்கள் ஒரு மருத்துவரிடம் ஆலோசிப்பது முக்கியமானது:

  • நீங்கள் இருமும் போது ரத்தம் வெளிவருகிறது
  • தொடர்ச்சியான இருமல் காரணமாக உங்களுக்கு தூக்கத்தில் இடையூறு உள்ளது
  • உங்களுக்கு காய்ச்சல் அதிகமாக உள்ளது
  • உங்களுக்கு இருமலுடன் சேர்ந்து மூச்சுத்திணறல், இளைப்பு அல்லது குரல் கரகரப்பு இருக்கிறது
  • உடற்பயிற்சி/உணவுமுறை கட்டுப்பாடு இல்லாமலே உங்கள் எடை குறைகிறது
  • இருமல் காரணமாக உங்களுக்கு நெஞ்சில் வலிக்கிறது
  • இருமலால் நீங்கள் பள்ளிக்கு அல்லது வேலைக்கு செல்வது பாதிக்கிறது

Please Select Your Preferred Language