உலக ஆஸ்த்மா மாதம்- மே 02, 2017

ஒட்டுமொத்த ஆரோக்கியம் என வரும் போது, நமது உடல் நன்கு எண்ணெயிட்ட ஒரு இயந்திரத்தை போல் வேலை செய்ய வேண்டும். இதன் அர்த்தமாவது நமது அனைத்து உறுப்புகளுமே - இதயம், மூளை, வயிறு, மற்றும் நமது நுரையீரல்கள் கூட ஒரு அனுகூலமான நிலையில் இருக்க வேண்டும். சுவாசிக்கும் திறனுள்ள நமது நுரையீரல்களை நாம் அலட்சியப்படுத்துகிறோம், மூச்சு விடுவதில் நமக்கு ஏதாவது பிரச்சனை வரும் வரையில் அவை பற்றி நாம் நினைப்பதில்லை. எனினும், ஏராளமான மனிதர்கள் நுரையீரல்கள் மீது கவனம் செலுத்துவதில்லை மற்றும் ஒரு சுவாச பிரச்சனை அவர்களுக்கு இருப்பது கண்டறியப்பட்டால் (மற்றும் அறிந்திடும் போதும்) கவலைப்படுகிறார்கள். ஆஸ்த்மா மற்றும் ஒவ்வாமைகள் போன்ற சுவாசப் பிரச்சனைகள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. சரியான நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை உடன், அவைகளுக்கு மிக சுலபமாக சிகிச்சை அளித்து சமாளித்திட முடியும்.
பல்வேறு சுவாசப் பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சைகள் குறித்து மக்களுக்கு பயிற்றுவிக்க, ப்ரீத்ஃப்ரீ (சிப்லாவின் பொது சேவை முனைப்பு) உலக ஆஸ்த்மா தினத்தை முன்னிட்டு அதாவது மே 02, 2017 அன்று  நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் முகாம்களை நடத்தியது. மக்கள் ஸ்பைரோமீட்டர்கள் மற்றும் ப்ரீத்-ஓ-மீட்டர்களை பயன்படுத்தி தங்களது நுரையீரல் திறனை பரிசோதித்திட இந்த முகாம்கள் உதவின, அதே சமயம் பல்வேறு சுவாசப் பிரச்சனைகளின் அடிப்படை மற்றும் அவற்றுக்கு சிகிச்சை அளித்திட இன்ஹேலர்கள் ஏன் செயல்திறனுள்ளதாக இருக்கிறது என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கினர். இன்ஹேலர்கள் பற்றி சூழ்ந்திருக்கும் தவறான நம்பிக்கைகள் பற்றி பேசிய மருத்துவர்கள், சுவாசப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இன்ஹேலர்களே மிகவும் செயல்திறன் கொண்டது என்பதை நிரூபிக்க உண்மைகள் குறித்தும் விளக்கினர்.
இந்த முகாம்கள் பெரும் வெற்றி பெற்றன, ஏராளமானவர்கள் முகாம்களுக்கு சென்று பயனடைந்ததோடு தங்களுக்கு அருகாமையில் உள்ள இடங்களிலும் அதிக முகாம்களை அமைக்குமாறு ப்ரீத்ஃப்ரீ இயக்கத்தினரை கேட்டுக் கொண்டனர்.