மூச்சுத்திணறல்

மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்

உங்களுக்கு ஜலதோஷம் இருக்கையில் அல்லது மேற்புற சுவாசப் பாதையில் ஒரு நோய்த்தொற்று இருக்கையில் லேசாக இளைப்பு ஒலி கேட்பது சாதாரணமானது. அந்த மாதிரி நேரங்களில், உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் வழக்கமான மருந்துகள் உங்கள் காற்றுப்பாதையில் இருக்கும் சளி (கபம்) அடைப்பை நீக்கவும் மற்றும் இளைப்பை நிறுத்தவும் உதவும்.

எனினும், தெளிவான காரணம் எதுவுமின்றி உங்களுக்கு இளைப்பு ஒலி வருவது அல்லது மூச்சு விடுவதில் சிரமம் / வேகமாக மூச்சை இழுத்து விடுவது உடன் உங்களுக்கு இளைப்பு தொடர்ந்து திரும்ப வருகிறது என்றால், துல்லியமான நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்காக நீங்கள் உடனடியாக ஒரு மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.