தூண்டுகோலாக

புகழ்வெளிச்சத்தின் கீழ் கனவுகள்

ஜிதேஷூக்கு நடனமாடுவது எப்போதுமே மிகப் பிடித்தமானதாக இருந்தது. இயல்பாகவே அவன் இசையை மனதில் உள்வாங்கி தேர்ந்த நடனக்காரர் போல் ஆடுவார். இதனால், ஒரு தொழில்முறை நடனக்காரராக தான் வர விரும்புவதாக அவன் கூறிய போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். அவனது கனவுகள் நனவாகி புகழின் உச்சியை அடைய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.

 

இப்படியிருக்கையில் ஒரு நாள் அவன் நடனப்பயிற்சி வகுப்புக்கு செல்ல மறுத்த போது ஏதோ தவறாக இருக்கிறது என எங்களுக்கு தெரிந்தது. பயிற்சி வகுப்புக்கு செல்லாமல் ஏன் தவற விடுகிறான் என்று எங்களுக்கு புரியவில்லை மற்றும் அவனிடம் பேச முயற்சிசெய்தோம். ஆனால் அவன் காரணம் எதுவும் கூறாமல், இனிமேல் நடனமாட போவதில்லை என்று மட்டும் கூறி வந்தான். அவனிடம் நீண்ட நேரம் இதமாக பேசி சமாதானப்படுத்திய பிறகு கடைசியாக, அதற்கான காரணத்தை கூறினான். வழக்கமான நடனப் பயிற்சிக்கு நடுவே அவனுக்கு மூச்சு பிடிப்பது சிரமமாக இருப்பதை அவன் கண்டறிந்ததால் பயிற்சி வகுப்பு செல்ல அவன் விரும்பாதது தெரிய வந்தது.

 

ஜிதேஷ் அவனது கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நாங்கள், மருத்துவரிடம் சென்றோம். அதன் பிறகு மருத்துவர் கூறியது எங்கள் அனைவரின் கனவுகளையும் சிதறடித்து விட்டது - அது ஜிதேஷூக்கு ஆஸ்த்மா உள்ளது என்பது தான்.

 

முதலில் எங்களால் நம்பவே முடியவில்லை. அது எப்படி இருக்கும்? அவன் என்ன செய்ய வேண்டும்? ஏன் அவனுக்கு வந்தது? பலர் பலவிதமான தெரிவுகளை கூறினர். பல்வேறு சிகிச்சைமுறைகள். அவன் நடனமாடுவது ஒருபுறம் இருக்கட்டும், அவனால் மறுபடியும் வழக்கம் போல் நடக்க அல்லது ஓட முடியுமா என்று நாங்கள் கவலைப்பட்டோம்.

 

இறுதியாக, இன்ஹேலர்கள் எங்களின் உதவிக்கு வந்தது. ஜிதேஷ் இன்ஹேலஷன் தெரபியை எடுக்கத் தொடங்கினான் மற்றும் அவனுக்கு ஆஸ்த்மாவை தூண்டும் விஷயங்களை தவிர்ப்பதில் மிகவும் கவனமாக இருந்தான். இன்ஹேலர்கள், மருத்துவரை அவ்வப்போது சந்தித்து பரிசோதனை செய்துக் கொள்வது மற்றும் ஜிதேஷின் விடாமுயற்சி ஒரு கட்டத்தில் அவனுக்குள்ள ஆஸ்த்மாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவியாக இருந்தது.

 

இப்போது, ஜிதேஷ்  நிறைய நடனமாடுவது உள்பட அவன் விரும்பியதை செய்கிறான். அவனுக்கு ஒரு பிரச்சனை இருப்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியாது. அவனது பள்ளி ஆண்டு விழாவில் கூட அவன் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.

ஜிதேஷூக்கு ஆஸ்த்மா இருப்பதை கிட்டத்தட்ட நாங்கள் மறந்து விட்டது போல் உள்ளது.

Please Select Your Preferred Language