பயன்படுத்துவதற்கான விதிமுறைகள்

சிப்லா லிமிடெட்டின் ப்ரீத்ஃப்ரீ வெப்சைட்டான www.breathefree.com(‘தளம்’’) உங்களை வரவேற்கிறோம். பயன்படுத்துவதற்கான இந்த விதிமுறைகள், எந்தவொரு தனிநபரும் (‘‘பயனாளர்) இந்த தளத்தை பயன்படுத்த அல்லது அணுகுவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை (‘விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்’’) நிர்ணயித்துள்ளது. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சிப்லா லிமிடெட் மாற்றலாம் அல்லது முன்னறிவிப்பு எதுவுமின்றி எந்த நேரத்திலும் இந்த தளத்தை இடையிலேயே நிறுத்தி விடலாம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய எந்தவொரு குறிப்பும், திருத்தப்பட்ட அல்லது மாற்றம் செய்யப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை குறிப்பதாக அர்த்தமாகும். இந்த தளம் மற்றும் அதிலுள்ள பொருளடக்கம் இந்திய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் இதர பகுதிகளில் இருந்து இந்த இணையதளத்தை பார்க்க முடியும் என்றாலும் கூட, இந்த தளம் மற்றும் அதிலுள்ள பொருளடக்கம் இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமே அணுகிப் பயன்படுத்தும் உத்தேசத்தை கொண்டது.

 

இந்த தளம் மூலம் மருத்துவர்&நோயாளி உறவை உண்டாக்க உத்தேசிக்கப்படவில்லை. எந்தவொரு மருந்துகள் பரிந்துரைப்பு/சிகிச்சை தொடர்பாக சிப்லா லிமிடெட் (அதன் சார்பு நிறுவனங்கள், பின்வருவோர்கள் மற்றும் ஒதுக்கீட்டுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் உள்ளடங்கும்) எந்தவொரு பொறுப்போ, உத்தரவாதமோ எடுத்துக் கொள்ளாது. இந்த தளத்தில் பெயர் வெளியிடப்பட்டுள்ள ஆரோக்கிய பராமரிப்பு அலுவலர்கள் சுதந்திரமானவர்கள் மற்றும் தனியாக பயிற்சி பெறுபவர்கள், அவர்கள் சிப்லாவின் ஊழியர்களோ, முகவர்களோ கிடையாது. இந்த ஆரோக்கியப் பராமரிப்பு அலுவலர்களின் தகுதிகள் அல்லது அங்கீகாரம், அல்லது அவர்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனை சரியாக உள்ளதா என்பவற்றுக்கு சிப்லா லிமிடெட் பொறுப்பு எதுவும் எடுக்காது. ஆரோக்கிய பராமரிப்பு வழங்குபவரின் பெயர், முகவரி, பொருளடக்கம், பொருட்கள் தொடர்பாக இந்த தளத்தில் உள்ள எந்தவொரு தகவலுக்கும் சிப்லா லிமிடெட் சட்டப்படி ஒப்புதல் அளிக்கவில்லை அல்லது பரிந்துரைக்கவில்லை அல்லது அறிவுறுத்தவில்லை மற்றும் தகவலின் சான்றுறுதி மற்றும் நம்பகத்தன்மையை பயனாளர் சரிபார்க்க உத்தரவிடப்படுகிறது.

 

1. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளல்: இந்த தளத்தை அணுகுவது மற்றும் பயன்படுத்துவதும், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் மற்றும் உரித்தாகும் அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டது. இந்த தளத்தை அணுகி பிரவுசிங் செய்வது, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எந்தவொரு குறைபாடு அல்லது தகுதியின்றி பயனாளர் வாசித்து, புரிந்துக்கொண்டு மற்றும் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று கருதப்படுகிறது. மேலும், சிப்லா லிமிடெட் உடனான எந்தவொரு ஒப்பந்தமும், இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் முரண்பட்டால் இதற்கு மாற்றாக கைக்கொள்ளப்படும் மற்றும் அமலில் அல்லது நடைமுறையில் இருக்காது. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால், இந்த மையத்தை நீங்கள் அணுக முடியாது அல்லது பயன்படுத்த முடியாது. ஆகவே, இந்த தளத்தை இந்தியாவில் இருந்து அல்லது இந்தியாவுக்கு வெளியே இருந்தோ பயன்படுத்தும் அல்லது அணுகும் எந்தவொரு பயனாளர் அல்லது சேவை வழங்குபவர், முற்றிலும் அவரது சுய ரிஸ்கிற்கு உட்பட்டு இந்த தளத்தை பயன்படுத்துகிறார் அல்லது அணுகுகிறார் மற்றும் அவர் அணுகக்கூடிய நீதிமன்ற வரம்பின் சட்டத்துக்கு இணக்கமாக இருக்கும் பொறுப்பை கொண்டுள்ளார்.

 

2. தகவலை பயன்படுத்துதல்: தகவலை ஒரு குறிப்பு உதவியாக மட்டுமே பயனாளர் பயன்படுத்துவார், மற்றும் அவ்வாறான பொருளை தொழில்முறையிலான தீர்மானத்தை பிரயோகிப்பதற்கு ஒரு மாற்றாக உத்தேசிக்கப்படவில்லை (அவ்வாறு பயன்படுத்தப்படக் கூடாது). மனித தவறு அல்லது மருத்துவ அறிவியல் மாற்றங்கள் சாத்தியக்கூறு ஏதேனும் இருந்தால், சுதந்திரமான ஆதாரங்கள் மூலமாக தகவலை பயனாளர் உறுதிப்படுத்த வேண்டும். இந்த தளத்தை பயனாளர் சுதந்திரமாக பிரவுஸ் செய்யலாம், ஆனால் ஏதேனும் உரை, சத்தம், படங்கள், ஒலி மற்றும் ஒளி (ஒருசேர: ‘‘தகவல்’’) உள்ளிட்டவற்றை கண்டிப்பாக வர்த்தக&பயன்பாடு இல்லாத நோக்கத்துக்கு மட்டுமே அணுகிப் பார்க்க, பதிவிறக்க அல்லது தகவலை பயன்படுத்த வேண்டும். சிப்லா லிமிடெட்டின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் தகவலை வர்த்தக நோக்கங்களுக்காக பயனாளர் விநியோகிக்க, மாற்றம் செய்ய, பரிமாற்றம் செய்ய, மீள்பயன், மீள்இடுகை அல்லது பயன்படுத்தக் கூடாது. இந்த தளத்தில் நீங்கள் வாசிக்கும் அல்லது பார்க்கும் அனைத்தும் பொருத்தமான சட்டங்களுக்கு ஏற்ப, இதரவகையில் குறிப்பிடாத பட்சத்தில் காப்பிரைட் செய்யப்பட்டது; மற்றும் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டது தவிர்த்து வேறு வகையில் பயன்படுத்தக் கூடாது. தகவலை பயன்படுத்துவது மூன்றாவது தரப்புகளின் உரிமைகள் எதையும் மீறியதாக சிப்லா லிமிடெட் உத்தரவாதமோ, பிரநிதித்துவமோ அளிக்கவில்லை. இந்த தளத்தை பயன்படுத்துவது தகவல் உரிமம் அல்லது உரிமை அல்லது சிப்லா லிமிடெட்டின் எந்தவொரு காப்பிரைட் எதுவும் வழங்கப்படாது. தளத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள டிரேட்மார்க்குகள், சின்னங்கள், சேவை குறியீடுகள் (ஒருசேர ‘‘டிரேட்மார்க்ஸ்’’) ஆகியன சிப்லா லிமிடெட்டின் பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத டிரேட்மார்க் ஆகும். இந்த இணையத்தில் உள்ள எதுவும், சிப்லா லிமிடெட்டின் எழுத்துப்பூர்வமான முன் அனுமதியின்றி எந்தவொரு டிரேட்மார்க் அல்லது தகவலை பயன்படுத்த எந்தவொரு உரிமம் அல்லது உரிமை வழங்க அமைக்கப்பட்டதாக கருதக்கூடாது.

 

3. ‘‘உங்கள் கேள்விகள், சுலபமான பதில்கள்’‘ சேவையை பயன்படுத்துதல்: பயனாளர் சேவைகளில் உங்கள் கேள்விகள், சுலபமான பதில்கள் அம்சம், இணைப்பு, கம்யூனிட்டிகள், பிளாக் அல்லது விவாத சேவை (‘‘உங்கள் கேள்விகள், சுலபமான பதில்கள் சேவை’’) பயன்படுத்துகையில் அனைத்து தகவல் தொடர்புகள், தகவல், தரவு, உரை, இசை, ஒலி, கிராபிக்ஸ், மெசேஜ்கள் மற்றும் இதர பொருள் (‘‘பொருளடக்கம்’’) பதிவேற்றம், இடுகையிடுவது, பரிமாற்றம், மின்னஞ்சல் செய்வது அல்லது உங்கள் கேள்விகள், சுலபமான பதில்கள் சேவை மூலமாக இதரவகையில் விநியோகிப்பதற்கு பயனாளரே பொறுப்பாவார். நீங்கள் அல்லது இதர எந்தவொரு தரப்பு உங்கள் கேள்விகள், சுலபமான பதில்கள், சேவை மூலமாக போஸ்ட் செய்யும் பொருளடக்கத்துக்கு சிப்லா லிமிடெட் பொறுப்பாகாது மற்றும் அது போன்றே அந்த பொருளடக்கத்தின் துல்லியத்தன்மை, மேன்மை அல்லது தரத்துக்கு உத்தரவாதமளிக்காது. உங்கள் கேள்விகள், சுலபமான பதில்கள் சேவையை பயன்படுத்துவதன் மூலமாக அவமதிக்கும் அல்லது ஆட்சேபனைக்குரிய பொருளடக்க தாக்கத்துக்கு உள்ளாகலாம் என்பதை நீங்கள் புரிந்துக் கொண்டுள்ளீர்கள். எந்தவொரு பொருளடக்கத்துக்கு அல்லது பதிவேற்றப்பட்ட பொருளடக்கம், போஸ்ட் செய்யப்பட்டது, பரிமாற்றம் செய்தது, மின்னஞ்சல் அனுப்பியது அல்லது இதரவகையில் உங்கள் கேள்விகள், சுலபமான பதில்கள், சேவை மூலமாக கிடைக்கப்பெற்றது தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ சிப்லா லிமிடெட் எந்த விதத்திலும் பொறுப்பாகாது. நீங்கள் அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்தால் அல்லது யாரேனும் அபாயத்தில் இருப்பதாக நம்பினால், நீங்கள் உடனடியாக உங்களின் உள்ளூர் சட்ட அமலாக்கல் முகமையை தொடர்பு கொள்ள வேண்டும். உங்கள் கேள்விகள், சுலபமான பதில்கள் சேவையை பயனாளர் பயன்படுத்துகையில், அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள் இவற்றை:

 

) உள்ளூர், மாநில, தேசிய அல்லது சர்வதேச சட்டங்களை மீறுவதில்லை

பி) மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமையில் அல்லது மற்றவர்களின் அந்தரங்கத்தன்மை அல்லது பப்ளிசிட்டி உரிமைகளில் பாதிப்பை உண்டாக்கும் எந்தவொரு பொருளடக்கத்தையும் போஸ்ட் செய்ய, பதிவேற்ற, மின்னஞ்சல் அனுப்ப, பரிமாற்றம் செய்ய அல்லது இதரவகையில் விநியோகிக்கக் கூடாது;

சி) எந்தவொரு நபர் அல்லது நிறுவனத்துக்கு எதிராக சட்டவிரோதமான, தீங்கான, ஆபாசமான, இழிவுப்படுத்தும், அச்சுறுத்தலான, துன்புறுத்தும், திட்டுகிற, அவதூறான, வெறுக்கத்தக்க, அல்லது சங்கடத்தை உண்டுபண்ணும் எந்தவொரு பொருளடக்கத்தையும் போஸ்ட் செய்ய, பதிவேற்ற, மின்னஞ்சல் அனுப்ப, பரிமாற்றம் செய்ய அல்லது இதரவகையில் விநியோகிக்கக் கூடாது;

டி) வயது வராதவர்களுக்கு எந்த விதத்திலும் தீங்கிழைக்கக் கூடாது;

 

) விளம்பரங்களை இடுவது அல்லது தொழில் அழைப்புகளை மேற்கொள்வது;

 

எஃப்) உங்கள் கேள்விகள், சுலபமான பதில்கள் சேவை மூலமாக பரிமாற்றப்படும் எந்தவொரு பொருளடக்கத்தின் மூலத்தை மறைக்க ஏதுவாக தலைப்புகளில் மோசடி செய்வது அல்லது அடையாளப்படுத்துபவைகளை இதரவகையில் சூழ்ச்சியுடன் கையாள்வது கூடாது;

ஜி) செயின் லெட்டர்கள், பிரமிட் திட்டங்கள், கோரப்படாத அல்லது அங்கீகாரமற்ற விளம்பரம் அல்லது ஸ்பாம் இடுகையிட, பதிவேற்ற, மின்னஞ்சல், பரிமாற்ற அல்லது இதரவகையில் விநியோகிக்கக் கூடாது;

ஹெச்) இன்னொரு நபர் அல்லது தொழில் நிறுவனம் போல் நடிப்பது அல்லது பின்தொடர்தல் அல்லது இன்னொரு நபரை இதரவகையில் தொல்லைப்படுத்தக் கூடாது;

) வைரஸ்கள் அல்லது எந்தவொரு கணினி மென்பொருள் அல்லது வன்பொருள் பயன்பாட்டில் குறுக்கிட, அழிக்க அல்லது கட்டுப்படுத்திட இதரவகையில் தீங்கிழைக்க வடிவமைக்கப்பட்ட கணினி குறியீடை போஸ்ட் செய்ய, பதிவேற்ற, மின்னஞ்சல் செய்ய, பரிமாற்றம் அல்லது இதரவகையில் விநியோகிக்கக் கூடாது;

ஜே) மின்னஞ்சல் முகவரிகள் உள்பட மற்றவர்கள் பற்றிய தகவலை எடுக்க அல்லது இதரவகையில் சேகரிக்கக் கூடாது;

கே) கருத்துகளை இடுகையிட அல்லது பார்க்க உங்களின் அடையாளத்தை வேறு எந்தவொரு நபர் அல்லது நிறுவனம் பார்க்க அனுமதிக்கக் கூடாது;

எல்) உங்கள் கேள்விகள், சுலபமான பதில்கள் சேவை அல்லது கணினிகள், நெட்வொர்கள் அல்லது உங்கள் கேள்விகள், சுலபமான பதில்கள்&சேவை உடன் இணைக்கப்பட்ட இதர வன்பொருள் உடன் குறுக்கிட அல்லது தகர்க்கக் கூடாது, அல்லது எந்தவொரு உத்தரவுகள் அல்லது உங்கள் கேள்விகள், சுலபமான பதில்கள்&சேவை உடன் இணைக்கப்பட்ட நெட்வொர்க் கொள்கைகளை புறக்கணிக்கக் கூடாது;

எம்) உங்கள் கேள்விகள், சுலபமான பதில்கள்&சேவையை வேறு எவரேனும் பயன்படுத்துவது அல்லது அனுபவிப்பதை கட்டுப்படுத்தும் அல்லது தடுக்கும் இதர செயல் எதிலும் ஈடுபடக் கூடாது அல்லது எங்களின் முழு தீர்மானத்தின்படி, எங்களை, அல்லது எங்களின் வாடிக்கையாளர்களை அல்லது சப்ளையர்களை எந்தவொரு பொறுப்புக்கும் உள்ளாக்குவது அல்லது எந்தவொரு வகையான கேடு விளைவித்தல் கூடாது.

என்) இதர பயனர்களின் அந்தரங்கத்தன்மையை மதிக்க தவறக் கூடாது. இதில் இன்னொரு பயனரின் கடவுச்சொல், தொலைபேசி எண், முகவரி, இன்ஸ்டன்ட் மெஸஞ்சர் .டி. அல்லது முகவரி அல்லது இதர ஏதேனும் தனிப்பட்ட அடையாளம் காணத்தக்க தகவலை வெளிப்படுத்துவது உள்ளடங்கும்;

) உறுப்பினர் பெயர்களை உருவாக்குதல், அல்லது பாலியல் ரீதியிலான அழைப்பு அல்லது மெஸேஜ்கள், உரை அல்லது புகைப்படங்களை அனுப்பி மற்றவர்களை இதர ஏதேனும் விதத்தில் இழிந்துரைப்பது, அச்சுறுத்துவது, துன்புறத்துவது அல்லது தீங்கிழைக்கக் கூடாது; அல்லது கீழ்க்குறிப்பிட்டுள்ளவைகளில் அனைத்தையும் அல்லது எதையேனும் சிப்லா லிமிடெட் முன்னறிவிப்பு எதுவுமின்றி செய்யக்கூடும் (ஆனால் கடமைப்பட்டதல்ல);

 

i) உரையாடலை பதிவு செய்தல் அல்லது ஒரு பொது அறையில் திரையிடுதல்;

ii) இந்தப் பிரிவின் விதிமுறைகளுக்கு ஒரு தகவல்தொடர்பு ஒத்துப்போகாதது பற்றிய ஒரு குற்றச்சாட்டை விசாரித்தல் மற்றும் எங்களின் முழு தீர்மானத்தின்படி அப்பொருளடக்கத்தை அகற்றுதல் அல்லது அகற்றக் கோருவது என தீர்மானித்தல்;

iii) திட்டுகிற, ஆட்சேபனைக்குரிய, சட்டவிரோதமான அல்லது சீர்குலைக்கும் பொருளடக்கம் அல்லது பயன்படுத்துவதற்கான இந்த விதிமுறைகளுக்கு ஒத்துப்போகாத இதரவைகளை நீக்குதல்;

iv) பயன்படுத்துவதற்கான இந்த விதிமுறைகளை நீங்கள் மீறிவிட்டீர்கள் என்ற எங்களது தீர்மானத்தின் அடிப்படையில் உங்களின் கேள்விகள், சுலபமான பதில்கள் & சேவைகளில் எவற்றையேனும் அல்லது அனைத்தையும் நீங்கள் அணுகுவதை ரத்து செய்தல்; அல்லது

v) பொருளடக்கத்தில் எடிட் செய்தல். எந்தவொரு பொருளடக்கத்தின் பயன்பாடு உடன் தொடர்புள்ள அனைத்து அபாயங்களையும் மதிப்பிட மற்றும் தாங்கிக் கொள்ள பயனாளர் சம்மதிக்கிறார், இதில் அந்த பொருளடக்கத்தின் துல்லியத்தன்மை, முழுமை, அல்லது பயன்பாட்டை சார்ந்திருப்பதும் உள்ளடங்கும். பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் மீறப்பட்டதா என்பதை தீர்மானிக்கவும் அல்லது பொருத்தமான சட்டம், ஒழுங்குமுறை, அரசாங்க கோரிக்கை அல்லது சட்ட செயலாக்கத்துக்கு இணங்க ஏதுவாக உங்கள் கேள்விகள், சுலபமான பதில்கள்&சேவையை நீங்கள் பயன்படுத்தியதை சிப்லா லிமிடெட் விசாரிக்கலாம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டு, சம்மதித்து மற்றும் ஒப்புக் கொள்கிறீர்கள். உங்கள் கேள்விகள், சுலபமான பதில்கள்&சேவையில் உங்களின் பொருளடக்கம் உள்ளிட்டவற்றை செயலாக்கம் செய்து பரிமாற்றம் செய்வதில் பல்வேறு நெட்வொர்க்குகள் மற்றும் உபகரணங்களில் பரிமாற்றம் செய்வது சம்பந்தப்பட்டிருக்கலாம் மற்றும் அந்த பரிமாற்றங்களுக்கு தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படும் என்பதையும் பயனாளர் ஏற்றுக் கொண்டு ஒப்புக் கொள்கிறார்.

 

பயனாளர் வசிப்பிடத்தின் நீதிமன்ற வரம்புக்கு உட்பட்ட இடத்தில் பிராக்டிஸ் செய்ய அங்கீகரிக்கப்பட்ட உரிமம் உள்ள ஒரு ஆரோக்கிய பராமரிப்பாளரிடம் இருந்து மருத்துவ ஆலோசனையை பெறுவதற்கான ஒரு மாற்றாக இந்த பொருளடக்கத்தை பயன்படுத்தக் கூடாது. இந்த இணையத்தில் விவரிக்கப்பட்டுள்ள அல்லது பரிந்துரைக்கப்பட்டதை அல்லது இதரவகையில் முதலில் அவரது மருத்துவரிடம் ஆலோசிக்காமல் எந்தவொரு மருந்தளிப்பு, உணவுமுறை உபரி அல்லது சிகிச்சையை பயனாளர் எடுக்கக் கூடாது அல்லது தொடங்கக் கூடாது.

 

4. மருத்துவ தகவல்: இந்த தளத்தில் ஏதேனும் பொருட்கள் அல்லது மருத்துவ உபகரணங்கள் தொடர்பான தகவல் (கூட்டாக ‘‘பொருட்கள்’’) பொது தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே சிப்லா லிமிடெட்டால் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பொருட்களும் இந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது மற்றும் தகுதியான ஒரு மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணரின் பரிந்துரைப்பின் பேரில் மட்டுமே கிடைக்கிறது. அனைத்து நாடுகளிலும் பொருட்கள் கிடைக்காது அல்லது ஒரு வித்தியாசமான பிராண்ட் பெயரில், வெவ்வேறு வீரியங்களில், அல்லது வெவ்வேறு அறிகுறிகளுக்கு கிடைக்கலாம்.

 

5. வீடியோ மறுதலிப்பு: இந்த தகவல் மின்னணு ஊடக (வரம்புகள் இன்றி, வீடியோக்கள், மருத்துவர்கள் மற்றும் ஆரோக்கியப் பராமரிப்பு நிபுணர்களின் பேட்டிகள் உள்பட) கட்டுரைகளாக அனுப்பப்படலாம். அந்த ஆதாரங்கள் வழியாக வழங்கப்படும் இந்த தகவல், அவற்றை வெளிப்படுத்தும் தனிநபர்களின் கருத்துகளாகும் மற்றும் சிப்லா லிமிடெட்டின் நேரடி அல்லது மறைமுக கட்டுப்பாட்டிலோ இல்லை. அந்த மாதிரி தகவல் எதையும் ஏதேனும் மின்னணு முறையில் சேர்த்துக் கொள்வதால், அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை சிப்லா லிமிடெட் ஒப்பளித்ததாக சுட்டிக்காட்டாது.

 

6. பொறுப்பு மறுதலிப்பு: இந்த தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள அல்லது கிடைக்கும் தகவல், மென்பொருள், பொருட்கள் மற்றும் சேவைகளில் துல்லியமின்மை அல்லது அச்சுப்பிழைகள் இருக்கலாம். அந்த தவறுகள் எதற்கும் சிப்லா லிமிடெட் பொறுப்பு எதுவும் ஏற்காது மற்றும் இதன்மூலம் அனைத்து உத்தரவாதங்கள் மற்றும் நிபந்தனைகளையும் மறுதலிக்கிறது, இதில் வணிகத்துக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட அனைத்து வாரண்டிகள் மற்றும் நிபந்தனைகள், ஃபிட்னஸ், டைட்டில், முழுமைத்தன்மை மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள தகவல் சம்பந்தப்பட்டதும் அடங்கும். இந்த இணையத்தில் உள்ள தகவல் துல்லியமானது, முழுமையானது அல்லது நிகழ்நிலைப்படுத்தப்பட்டது என சிப்லா லிமிடெட்டால் உத்தரவாதமளிக்க முடியாது. இந்த தளத்தில் உள்ள தகவலை நிகழ்நிலையானதாக வைத்திருக்க சிப்லா லிமிடெட் அனைத்து முயற்சிகளையும் எடுக்க சிப்லா லிமிடெட் உத்தேசித்தாலும் கூட இந்த தளத்தின் உரிமையாளர்கள் மற்றும் பங்களிப்பவர்கள் துல்லியத்தன்மை, முழுமைத்தன்மை, அல்லது இந்த தளத்தில் அடங்கியுள்ள தகவல் போதுமானது என்று க்ளெய்ம், உறுதிமொழி அல்லது உத்தரவாதம் கொடுப்பதில்லை. ஒவ்வொரு நோயாளியின் பிரத்யேக சூழல்களுக்கு ஏற்றதாக ஆலோசனை இருக்க வேண்டும் என்பதால், இந்த தளத்தில் உள்ள எதையும் மருத்துவரின் ஆலோசனைக்கு ஒரு மாற்றாக பயன்படுத்தக் கூடாது. பயனாளர் தனது ஆரோக்கியம் ஏதேனும் கேள்விகள், எந்தவொரு பிரத்யேக மருத்துவப் பிரச்சனை/விஷயம் அல்லது எந்தவொரு சிகிச்சை முடிவுகளை எடுப்பதற்கு முன்பு எப்போதுமே ஒரு மருத்துவரிடம் அல்லது இதர தகுதியான ஆரோக்கியப் பராமரிப்பு நிபுணரிடம் ஆலோசிக்க வேண்டும்.

 

7. பயனர் தகவல். இந்த தளத்தில் பயனாளர் மின்னஞ்சல் அல்லது இதரவகையில் அனுப்பும் எந்தவொரு தகவல் அல்லது பொருளை போஸ்ட் செய்தாலும் தரவு, கேள்விகள், கருத்துகள், யோசனைகள் (‘பயனர் தகவல்’’) ரகசியமற்றதாக, மற்றும் தனியுரிமை அல்லாத தகவலாக இருக்கும் மற்றும் அவ்வாறே பராமரிக்கப்படுவதோடு சிப்லா லிமிடெட்டின் உடைமை ஆகிவிடும். சிப்லா லிமிடெட் அல்லது அந்த துணைநிறுவனங்களில் ஏதேனும் ஒன்று பயனாளர் தகவலை எந்தவொரு நோக்கத்துக்கும் பயனாளருக்கு இழப்பீடு எதுவும் கொடுக்காமல் சேமிக்கலாம் அல்லது பயன்படுத்தலாம், இதில் மீள்உருவாக்கம், வெளிப்படுத்தல், டிரான்ஸ்மிஷன், பிரசுரிப்பு, ஒளிபரப்பு அல்லது மேற்கொண்டு போஸ்டிங் செய்வது உள்ளடங்கும், ஆனால் இவை மட்டுமே உட்பட்டதல்ல. மேலும் பயனாளரும் சிப்லா லிமிடெட் அல்லது அதன் துணை நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று பயனாளர் தகவல் எதிலும் அடங்கியிருக்கும் எந்தவொரு ஐடியாக்கள், கருத்தாக்கங்கள், எப்படி&தெரிந்துக் கொள்வது அல்லது செய்நுட்பங்களை எந்தவொரு நோக்கம் எப்படியிருப்பினும் சுதந்திரமாக சேமிக்கலாம், பயன்படுத்தலாம் என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறார், இவைகளில் பயனாளருக்கு இழப்பீடு எதுவும் கொடுக்காமல் பொருட்களை உருவாக்குவது, தயாரிப்பது மற்றும் சந்தைப்படுத்துவது உள்ளடங்கும், ஆனால் அவை மட்டுமே உட்பட்டதல்ல. சிப்லா லிமிடெட்டின் கட்டுப்பாடு ஒருவேளை மாறினால், பயனாளர் தகவலை இன்னொரு தரப்புக்கு மாற்றும் உரிமையை சிப்லா தக்க வைத்துள்ளது. மேலே கூறப்பட்டுள்ளது எப்படியிருந்த போதிலும் இந்த தளத்தில் மாற்றம் செய்ய அல்லது சட்டவிரோத, அச்சுறுத்தலாக, அவதூறாக, இழிவாக, ஆபாசமாக, முறைகேடாக, ஆத்திரமூட்டும், அருவெறுக்கத்தக்க எதையும் இடுகையிடுவது அல்லது அனுப்புவது ஒரு குற்றவியல் செயலாக கருதப்பட்டு, குடிமை பொறுப்பு அல்லது இதரவகையில் சட்டத்தை மீறிய செயலாக அமையும். அந்த மாதிரி தகவல் அல்லது கருத்தாக்கங்களை இடுகையிடும் எந்தவொரு நப்ரின் அடையாளத்தையும் வெளியிட சிப்லா லிமிடெட்டை கோரும் அல்லது உத்தரவிடும் சட்ட அமலாக்க அமைப்புகள் அல்லது நீதிமன்றங்களுக்கு சிப்லா லிமிடெட் ஒத்துழைக்கும். பயனாளரின் செயல் காரணமாக அல்லது விளைவால் சிப்லா லிமிடெட், அதன் சார்பு நிறுவனங்கள், இயக்குநர்கள், ஊழியர்கள், கன்சல்டன்ட்களை எந்தவொரு க்ளெயம், கோரிக்கை அல்லது சேதத்தில் இருந்து பாதுகாத்து நஷ்டஈடும் வழங்க பயனாளர் ஒப்புக்கொள்கிறார், இதில் நியாயமான வழக்கறிஞர் கட்டணங்களும் உள்ளடங்கும்.

 

8. இணைப்புகள்: இந்த தளத்தில் மூன்றாவது&தரப்பு இணையதளங்களுக்கான இணைப்புகள் இருக்கலாம், அவை பயனாளர்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளது. தொழில்முறையிலான ஆலோசனையை டூல்ஸ் கொடுப்பதில்லை அல்லது குறிப்பிட்ட பொருட்களுக்கு பரிந்துரைப்பதில்லை. மருத்துவர்கள் மற்றும் இதர ஆரோக்கிய பராமரிப்பு நிபுணர்கள், அவர்கள் வழங்கும் தகவல்படி தங்களின் சுய வைத்திய தீர்மானத்தை எடுக்க வேண்டும். பயனாளர்கள் தங்களின் சொந்த அபாயத்திலேயே அவ்வாறு செய்கின்றனர். இந்த இணைப்புகள் சிப்லா லிமிடெட்டின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை, மற்றும் எந்தவொரு இணைப்பையும் சேர்ப்பது அந்த இணையதளத்தை சிப்லா லிமிடெட்டை ஏற்றுக் கொள்வதாக அர்த்தமில்லை. சிப்லா லிமிடெட் அல்லது அதன் சார்பு நிறுவனங்கள், இயக்குநர்கள், ஊழியர்கள், அதிகாரிகள், கன்சல்டன்ட்கள் க்ளெய்ம் எதுவும் செய்வதில்லை, மற்றும் அந்த மூன்றாவது தரப்பு இணையதளங்களில் காணப்படும் எந்தவொரு தகவலுக்கும் பொறுப்பானவர்கள் இல்லை.

 

9. மாற்றத்தக்கதல்ல: இந்த தளம் மற்றும் தொடர்புள்ள இணையதளங்களை அணுகிப் பார்க்கும் பயனாளர்களின் உரிமை கண்டிப்பாக மாற்றத்தக்கதல்ல. தகவல் அல்லது ஆவணங்களை பெற ஒரு பயனாளருக்கு கொடுக்கப்பட்ட ஏதேனும் கடவுச்சொல், உரிமை அல்லது அணுகிப் பார்த்தல் மாற்றத்தக்கதல்ல மற்றும் சிப்லா லிமிடெட்டின் பிரத்யேக உடைமை ஆக இருக்கிறது.

 

10. ஆலோசனை அல்ல: இந்த தளம் பொதுவான தகவலை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. சிப்லா லிமிடெட்டில் (அல்லது அதன் துணைநிறுவனங்கள் எவற்றிலும்) முதலீடு செய்வதை அல்லது மருத்துவ ஆலோசனையை முன்வைப்பதில்லை, அதே போல் பொருட்களின் பொருத்தமான பயன்பாடு பற்றிய அறிவுரைகளையும் வழங்குவதில்லை.

 

11. பொறுப்பு வரம்பு: இத்தளத்தில் இதன்கீழ் வழங்கப்பட்டுள்ள தகவலின் துல்லியத்தன்மை, முழுமைத்தன்மை, கரன்சி அல்லது வரம்புமீறல்&அல்லாததற்கு சிப்லா லிமிடெட் வாரன்ட் எதுவும் தருவதில்லை; மற்றும் (பி) அனைத்து வாரண்டிகள் மற்றும் நிபந்தனைகள், வெளிப்படுத்தல், நடைமுறைப்படுத்தல் அல்லது சட்டப்பூர்வ, நடைமுறைப்படுத்தப்பட்ட வாரண்டிகள் அல்லது வர்த்தக நிபந்தனைகள், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்கான ஃபிட்னஸ், மற்றும் வரம்புமீறல்&அல்லாதவற்றை வெளிப்படையாக மறுக்கிறது. நம்பத்தகுந்தது என கருதப்படும் ஆதாரங்களில் இருந்து தகவல் பெறப்பட்டது என்பதாலேயே, அந்த தகவலின் துல்லியத்தன்மைக்கு சிப்லா லிமிடெட்டோ, சிப்லா லிமிடெட்டுக்கு பொருளடக்கம் வழங்குபவர்கள் உத்தரவாதம் தருவதில்லை. எந்தவொரு தகவலையும் சார்ந்திருப்பதற்கு முன்பு நிபுணர்களின் ஆலோசனையை பயனாளர் பெற வேண்டும். இந்த தளத்தை பயன்படுத்துவது பயனாளரின் ரிஸ்கிற்கு உட்பட்டது. சிப்லா லிமிடெட் அல்லது அதன் சார்பு நிறுவனங்கள் ஏதேனும், இயக்குநர்கள், ஊழியர்கள், அதிகாரிகள், கன்சல்டன்ட்களை நேரடியாக அல்லது மறைமுகமாக எந்த வகையான சேதங்கள் எதற்கும் பொறுப்பாக்க கூடாது, இதில் வரம்பின்றி, நேரடியாக, மறைமுகமாக, யதேச்சையாக, விளைவுசார், அல்லது எந்தவொரு உரிமை கோரல்கள் அல்லது இழப்புகள், எதிர்நோக்கக் கூடிய அல்லது எதிர்நோக்க முடியாததும் அடங்கும்; அல்லது பயனாளருக்கு தளத்தை பயன்படுத்துவதில் இருந்து அல்லது உருவாக்கம், தளத்தை சார்ந்திருப்பது, இதர மூன்றாவது தரப்பு தளம் ஏதேனும், எந்தவொரு தளத்தில் அடங்கிய இணைப்புகள் அல்லது தளத்தை பயன்படுத்த இயலாதது தொடர்பாக ஏற்படும் சாத்தியக்கூறு பற்றி முன்கூட்டியே தெரியப்படுத்திருந்தாலும் பொறுப்பாக்க முடியாது. இந்த வரம்பில் உங்களின் கணினி சாதனத்துக்கு உண்டாகும் சேதம் அல்லது உங்கள் கணினி சாதனத்தை தாக்கும் வைரஸ்கள் உள்ளடங்கும். இந்த தளத்தில் செய்யப்படும் போஸ்டிங்களின் இன்டராக்டிவ் தன்மை, பயனாளர்கள் போஸ்ட் செய்யும் மெட்டிரீயல்கள் எதற்கும் சிப்லா லிமிடெட் பொறுப்பு ஏற்பதை சாத்தியமற்றதாக்குகிறது. பயனாளர்கள் தெரிவிக்கும் திட்டங்கள், யோசனைகள், அபிப்பிராயங்கள், கருத்துகள், மற்றும் செய்யும் அவதானிப்புகள், மற்றும் பயனாளர்கள் வழங்கும் எந்தவொரு உரை, தரவு, புகைப்படங்கள், வீடியோ, மியூசிக், இசை, சாட்டிங், மெசேஜ்கள், கோப்புகள் அல்லது இதர மெட்டீரியல் (‘‘பயனாளர் சமர்ப்பிப்புகள்’’) ஆகியவற்றை சிப்லா லிமிடெட் ஆமோதிக்கவில்லை மற்றும் தளத்தில் பயனாளர் இடுகையிடும் எந்தவொரு சமர்ப்பிப்பின் நம்பகத்தன்மை, துல்லியம், தரம் தொடர்பாக சிப்லா லிமிடெட் எந்தவொரு உத்தரவாதமும் தருவதில்லை. பயனாளர் சமர்ப்பிக்கும் எதையேனும் பயன்படுத்துவதுடன் தொடர்புள்ள அபாயங்கள் எதையும் பயனாளர் மதிப்பிட்டு மற்றும் தாங்கிக் கொள்ள வேண்டும், இதில் அந்த பயனாளர் சமர்ப்பிப்பின் துல்லியத்தன்மை, முழுமைத்தன்மை, அல்லது பயன்பாடு சார்ந்திருப்பதும் உள்ளடங்கும். இந்த தளத்தில் போஸ்ட் செய்யப்பட்டுள்ள அனைத்து பயனாளர் சமர்ப்பிப்புகளும், பயனாளர் சமர்ப்பிப்பை முதலில் போஸ்ட் செய்த நபரின் முழு பொறுப்பாகும், மற்றும் அந்த பயனாளர் சமர்ப்பித்ததின் விளைவாக ஏதேனும் சேதம், இழப்பு, க்ளெய்ம், நடவடிக்கை எடுக்க அல்லது பொறுப்பேற்கச் செய்ய, பயனாளருக்கு உள்ள ஒரே தீர்வு சம்பந்தப்பட்ட அந்த பயனாளருக்கு எதிரானதாக இருக்க வேண்டும். தத்தமது சொந்த சமர்ப்பிப்புகள் மற்றும் அவற்றை போஸ்ட் செய்வதால் அல்லது பிரசுரிப்பதால் ஏற்படும் விளைவுகளுக்கு பயனாளர்களே முழு பொறுப்பாளியாவார்கள். பயனாளர்கள் தத்தமது சமர்ப்பிப்புகளுக்கு அனைத்து உடைமை உரிமைகளையும் தக்க வைத்துக் கொள்ள முடியும். எனினும், தளத்தில் பயனாளர்கள் தங்களது சமர்ப்பிப்புகளை இடுவதன் மூலமாக அதனை பயன்படுத்த, மீள்உருவாக்கம், விநியோகிக்க, மூலத்தகவலில் இருந்து படைப்புகளை உருவாக்க, வெளிப்படுத்த சிப்லா லிமிடெட்டுக்கு இதன் மூலம் ஒரு நிரந்தர, உலகளாவிய, பிரத்யேகமற்ற, ராயல்டி&ஃப்ரீ, துணைஉரிமம் உள்ள, மாற்றம் செய்யும் உரிமை மற்றும் உரிமத்தை பயனாளர்கள் வழங்குகிறார்கள் மற்றும் தளத்துடனும், சிப்லா லிமிடெட்டின் தொழில் தொடர்பாக பயனாளர் சமர்ப்பிப்புகளை வரம்பின்றி ப்ரோமோட் செய்ய மற்றும் தளத்தில் உள்ளதில் ஒரு பகுதியை அல்லது முழுவதையும் (மற்றும் அதன் மூலத்தகவலில் இருந்து உருவாக்கப்பட்டது) தற்போது அறியப்பட்ட அல்லது இதன்பிறகு உருவாக்கப்படும் எந்தவொரு ஊடகத்துக்கு மறுவிநியோகம் செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும். பயனாளர் வழங்கிய முன்னேற்பாடு உரிமம், பயனாளர் சமர்ப்பித்ததை தளத்தில் இருந்து நீக்கியதும் அல்லது அழித்ததும் தானாகவே ரத்தாகி விடும். பயனாளர் தனது சமர்ப்பிப்புகளை தளத்தில் போஸ்ட் செய்வதை தேர்வு செய்தால், அந்த பயனாளர் சமர்ப்பிப்பு பொருத்தமான சட்டங்களுக்கு இணக்கமானதாக, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தை தரநிலை விதிமுறைகளுக்கு ஏற்ப இருக்கும் என்பதை பயனாளர் குறித்துக் காட்டுகிறார். பயனாளர்கள் தளத்தை உபயோகிப்பது, சிப்லா லிமிடெட் உடன் தொடர்புள்ள பயனாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். எந்தவொரு பயனாளர் சமர்ப்பிப்பு தொடர்பாக ரகசியத்தன்மை எதற்கும் சிப்லா லிமிடெட் உத்தரவாதம் அளிப்பதில்லை என்பதை பயனாளர்கள் புரிந்துக் கொள்கிறார்கள் மற்றும் இது சம்பந்தமாக எப்படியிருப்பினும் எந்தவொரு பொறுப்பில் இருந்து சிப்லா லிமிடெட்டை பிரத்யேகமாக விடுவிக்கிறது. பயனாளர் சமர்ப்பிப்புகள் தொடர்பாக எந்தவொரு மற்றும் அனைத்து பொறுப்பையும் சிப்லா லிமிடெட் வெளிப்படையாக மறுதலிக்கிறது. பொருளடக்கம் மற்றும் பயனாளர் சமர்ப்பிப்புகளை தனது முழு விருப்ப தீர்மானத்தின்படி மற்றும் முன்னறிவிப்பு எதுவுமின்றி நீக்கும் உரிமையை சிப்லா லிமிடெட் தக்க வைத்துள்ளது. மேலும், தளத்தை ஒரு பயனாளர் அணுகிப் பார்ப்பதை எந்த நேரத்திலும், தனது முழு விருப்ப தீர்மானத்தின்படி மற்றும் முன்னறிவிப்பு எதுவுமின்றி ரத்து செய்யும் உரிமையையும் சிப்லா லிமிடெட் தக்க வைத்துள்ளது. இந்த தளத்தில் உள்ள தகவலை பயன்படுத்தியதன் விளைவாக ஒரு பயனாளருக்கு ஏற்படும் ஏதேனும் இழப்பு, சேதம், காயம், மருத்துவ அலட்சியம் அல்லது தொழில்முறையில் தவறாக செயல்பட்டதன் விளைவாக இதர மூன்றாவது தரப்பு நடவடிக்கை அல்லது விடுபட்டிருத்தல்கள்/சேவை வழங்குபவர்களின் செயல்கள் விளைவாக எழும் சட்டப்பூர்வ நடவடிக்கை உள்ளிட்டவற்றுக்கு சிப்லா லிமிடெட் அல்லது அதன் இயக்குநர்கள், ஊழியர்கள் அல்லது முகவர்கள் பொறுப்பாக மாட்டார்கள். மேலும், பயனாளர் செய்யும் ஏதேனும் க்ளெய்ம் விளைவாக சேவை வழங்குபவருக்கு ஏற்படும் ஏதேனும் இழப்பு அல்லது சேதத்துக்கு சிப்லா லிமிடெட் அல்லது அதன் இயக்குநர்கள், ஊழியர்கள் அல்லது முகவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்/பொறுப்பு ஏற்க மாட்டார்கள், இதில் தொழில்முறையில் தவறாக செயல்படுதல் அல்லது சேவை வழங்குபவரின் தொழிலை நிர்வகிக்கும் பொருத்தமான சட்டங்களை மீறுவதன் விளைவாக எழும் எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் அடங்கும். சிப்லா லிமிடெட்டுக்கு பொறுப்பு எதுவும் இல்லாதது தொடர்பான விதிமுறை, இந்த விதிமுறைகள் மற்றும் எப்படியிருப்பினும் ஏதேனும் காரணத்துக்காக பயன்படுத்துவது காலாவதியாவது மற்றும் ரத்து செய்யப்படுவதையும் தாண்டி அமலில் இருக்கும். தளத்தில் உள்ள தகவலை பயன்படுத்துவதுடன் அதன் தரம், கிடைப்பது அல்லது துல்லியத்தன்மை உள்ளிட்டவற்றுடன் தொடர்புள்ள எந்தவொரு வாரண்டிகளை வெளிப்படுத்தல் அல்லது நடைமுறைப்படுத்துவதை சிப்லா லிமிடெட் மறுதலிக்கிறது.

 

12. காப்பிரைட் நோட்டீஸ்: இந்த தளம் மற்றும் அதன் ஒட்டுமொத்த பொருளடக்கமும் காப்பிரைட் பாதுகாப்புக்கு உட்பட்டது. சிப்லா லிமிடெட்டின் வெளிப்படையான முன் சம்மதமின்றி எந்தவொரு சூழ்நிலைகளிலும் இத்தளத்தில் உள்ள பொருளடக்கத்தை நகலெடுக்கக் கூடாது. இங்கே வெளிப்படையாக அதிகாரமளிக்கப்பட்டுள்ளது நீங்கலாக, தளத்தில் இருக்கும் எந்தவொரு தகவல், உரை, படங்கள், ஆவணங்களை சிப்லா லிமிடெட்டின் எழுத்துப்பூர்வமான முன் சம்மதம் இல்லாமல் பயனாளர் வெளிப்படுத்த, பதிவிறக்க, விநியோகிக்க, மீள்உருவாக்க, மறுபிரசுரிப்பு, அல்லது பரிமாற்றம் செய்யக் கூடாது. எனினும், தளத்தில் ‘‘டவுண்லோட்’’ பிரிவில் அடங்கியுள்ள அறிவுசார் தரவுதளத்தில் இருந்து எந்தவொரு தகவலையும் பயனாளர் ஒரு யூஸர்நேம் மற்றும் பாஸ்வர்ட் பயன்படுத்தி அணுகி பதிவிறக்கம் செய்ய முடியும். அந்த மாதிரி பதிவிறக்கத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருளடக்கமும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மற்றும் சிப்லா லிமிடெட்டால் அங்கீகரிக்கப்படும். தளத்தில் உள்ள எந்தவொரு பொருளடக்கத்தையும் முறையான சான்று இல்லாமல் பயன்படுத்துவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் அறிவுசார் சொத்து உரிமைகளில் பாதிப்பு ஏற்படுத்துவதாக இருக்கும் மற்றும் காப்பிரைட் மோசடிக்காக பயனாளர் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள், பண இழப்பீடுகள் உள்ளிட்டவற்றுக்கு பயனாளரை உட்படுத்த முடியும். சிப்லா லிமிடெட்டின் உடைமையாக இல்லாத தளத்தில் காணப்படும் எந்தவொரு பொருளடக்கம், டிரேட்மார்க்(ஸ்), அல்லது இதர தகவல் சம்பந்தப்பட்ட உரிமையாளர்(கள்) காப்பிரைட் கொண்டது. அந்த வகைகளுக்கு சிப்லா லிமிடெட் எந்த விதத்திலும் உரிமை அல்லது பொறுப்பு கோராது, மற்றும் அவைகளில் எதையேனும் நீங்கள் பயன்படுத்தினால் அதன் உரிமையாளரிடம் இருந்து சட்டப்பூர்வமான சம்மதத்தை நீங்கள் கோர வேண்டும். பயனாளர் எந்தவொரு தகவலை பயன்படுத்தவோ அல்லது தகவல் பகுதிகளை இன்னொரு இணையதளத்தில் சேர்க்கவோ உத்தேசித்தால், சிப்லா லிமிடெட்டிடம் இருந்து எழுத்துப்பூர்வமான முன் அனுமதியை பயனாளர் முதலில் கண்டிப்பாக கோர வேண்டும். பயனாளர் சட்டவிரோத, ஆபாசமானதை பிரசுரிப்பதில் அல்லது மோதல்போக்கை தூண்டுவதை ஊக்கப்படுத்துவதில் ஈடுபட்டிருந்தால், அல்லது இணைப்பு எந்த விதத்திலாவது சிப்லா லிமிடெட்டின் மாண்பை எதிர்மறையாக சீர்குலைத்தால் சிப்லா லிமிடெட்டின் இணைப்புடன் சேர பயனாளர் அனுமதிக்கப்பட மாட்டார்.

 

13. பலதரப்பட்டது: நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒரு விதிமுறையை சட்டவிரோதமானது, செல்லத்தக்கதல்ல அல்லது வெறுமையானது என்று அதிகார வரம்புள்ள நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டால், அந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் மீதமுள்ள விதிமுறைகள் முழு வீச்சில் நடைமுறையில் இருக்கும்.

 

14. நிர்வகிக்கும் சட்டம்: இந்த தளத்தை உருவாக்கி மற்றும் கட்டுப்படுத்துவது மும்பையில் (இந்தியா) உள்ள சிப்லா லிமிடெட் ஆகும்; அதனால் இந்தியாவின் சட்டங்களே பொருந்தும்; மற்றும் நியதிகள் மற்றும் நிபந்தனைகளை பொறுத்தவரை மும்பையில் உள்ள நீதிமன்றங்கள் மட்டுமே அதிகார வரம்பை கொண்டுள்ளன. தேவைக்கேற்ப அவ்வப்போது முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் இந்த தளம் மற்றும் அதிலுள்ள தகவலை பயன்படுத்துவதன் விதிமுறைகளை ஒருதலைப்பட்சமாக மாற்றும் உரிமையை சிப்லா லிமிடெட் தக்க வைத்துள்ளது. பயனாளர்கள் ஒவ்வொரு தடவை தளத்தை பார்வையிடும் போதும் நிகழ்நிலைப்படுத்தல்கள் இருக்கிறதா என்றறிய நியதிகளை வாசிக்க அறிவுறுத்தப்படுகிறது. தளத்தில் இடம்பெற்றிருக்கும் எந்தவொரு தகவலையும், எந்தவொரு காரணம் எப்படியிருப்பினும் அறிவிப்பு எதுவுமின்றி நீக்கும் உரிமையும் சிப்லா லிமிடெட்டுக்கு உள்ளது.

Please Select Your Preferred Language